states

img

கலவரத்தில் ஈடுபட்டதாக 8 வயதுச் சிறுவனை சிறையில் அடைத்த பீகார் காவல்துறை!

பாட்னா, செப்.11- பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்  தில் உள்ள பர்ஹாரியா நகரத்தில், கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி இந்துத் துவா அமைப்பினர், ‘மகாவீர் அகாரா’ என்ற பேரணியை நடத்தினர். அப்போது முஸ்லிம்கள் அதிகம்  வசிக்கும் பர்ஹாரியா தெருக்களில் புகுந்த இந்துத்துவா கும்பல்,  மேற்கு தோலா மசூதி பகுதியில் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கியது. முஸ்லிம் பகுதிக்குள் நுழையும்  போது இஸ்லாமிய வெறுப்பு கோஷங்  களை எழுப்பிய இந்துத்துவா கும் பல், ஆபாசமான பாடல்களையும் ஒலிக்கவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சி யாக, இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு கல் வீச்சு சம்பவங்கள் அரங்  கேறியுள்ளன. இதற்கான வீடியோ ஆதாரங்களும் தற்போது வெளி யாகியுள்ளன. இந்நிலையில்தான், ‘மகாவீர் அகாரா’ பேரணியின்போது, வன் முறையைத் தூண்டியதாக கூறி உள்ளூர் மசூதியில் இருந்து 65 வய தான முகமது யாசின் மற்றும் அவ ரது 8 வயது பேரன் ரிஸ்வான் அலி உட்பட 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மசூதிக்கு தொழுகைக்காக சென்றிருந்த நிலையில், வன்முறை  வெடித்ததால், போலீசார் இவர் களைக் கைது செய்துள்ளனர். 65 வய தான யாசினுக்கு சமீபத்தில்தான் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்  யப்பட்டுள்ளன. இதுதவிர வேறுபல  உடல்நலக் கோளாறுகளும் உள்ளன  என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்ற னர். சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள  8 வயதுச் சிறு வன் ரிஸ்வான் அலியால் தனது தாயையே தற்போது அடையாளம் காண முடியவில்லை என்றும் மிக வும் பயந்து போயிருக்கிறான் என்  றும் கூறுகிறார் அவரது சகோதரர் அசார் மக்தூப். வீட்டுக்குப் போக வேண்டும் என்று ரிஸ்வான் தொட ர்ந்து அழுதுகொண்டே இருப்பதாக வும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ரிஸ்வானின் கை களைப் போலீசார் கயிற்றால் கட்டிப் போட்டிருப்பதாகவும், அவனை விடு விக்க போலீசார் தங்களிடம் ரூ.12 ஆயி ரம் வரை பணம் கேட்டதாகவும் குடும்  பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ரிஸ்வானின் பிறந்த தேதி ஜன வரி 1, 2014 என்று கூறி, பிறப்புச் சான்றி தழையும் குடும்பத்தினர் வெளி யிட்டுள்ள நிலையில், போலீசாரோ, ‘தனக்கு 13 வயது’ என்று ரிஸ்வானே மாஜிஸ்திரேட் முன்பு ஒப்புக் கொண்  டதாக கூறி சாதித்து வருகின்றனர். ரிஸ்வான் கல்வீச்சில் ஈடுபட்டதற் கான ஆதாரம் உள்ளதாகவும் கூறு கின்றனர். இதனிடையே, பீகார் மக்கள்  சமூகவலைதளங்களில் ‘ரிஸ் வானை விடுதலை செய்’ (#release rizwan) என்ற ஹேஷ்டேக்-கை ஞாயிறன்று இந்திய அளவில் டிரெண்ட் செய்தனர். “நிதீஷ் குமாரின் ஆட்சியில் குழந்தைகளுக்குமா பாதுகாப்பு இல்லை” என்று மஜ்லிஸ் கட்சித்  தலைவர் ஒவைசி கேள்வி எழுப்பி யுள்ளார். “கலவரக்காரர்களை பிடிக்  காமல் முஸ்லீம் குழந்தைகளை போலீஸ் எப்படி குறிவைக்கிறது?” என்றும் அவர் கேட்டுள்ளார்.

;