states

img

வி.எஸ். கடைசி கம்யூனிஸ்ட் அல்ல! வலதுசாரிகளின் பிரச்சாரத்திற்கு எம்.வி. கோவிந்தன் பதிலடி

வி.எஸ். கடைசி கம்யூனிஸ்ட் அல்ல! வலதுசாரிகளின் பிரச்சாரத்திற்கு எம்.வி. கோவிந்தன் பதிலடி

திருவனந்தபுரம் மறைந்த மூத்த சிபிஎம் தலை வர் வி.எஸ்.அச்சுதானந்தன் கடைசி கம்யூனிஸ்ட் என் றும், அவரது மரணத்துடன் கம்யூ னிசமே அழிந்துவிடும் என்றும் சிலர் பிரச்சாரம் செய்து வருவதாக சிபி எம் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் கூறினார். இதுதொடர்பாக செய்தியா ளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,”கம்யூனிஸ்ட்டுகள் உயிருடன் இருக்கும்போது அவர்க ளை அவமதித்து, அவர்களின் மர ணத்திற்குப் பிறகு அவர்களை புனி தர்களாக சித்தரிக்கும் முறையை வலதுசாரிகள் பின்பற்றுகிறார்கள். வி.எஸ்.-ன் கனவும் குறிக்கோளும் சிபிஎம்மின் கனவுகளைப் போன் றது. துக்க ஊர்வலம் முழுவதும் வரிசையில் நின்ற மக்கள் வி.எஸ். இறக்கவில்லை, அவர் தம் மூல மாகவே வாழ்கிறார் என்று முழக்க மிட்டனர். வி.எஸ். கண்ட கனவுகள் வரும் தலைமுறைகளுக்கு கடத் தப்படும், இலக்கு அடையப்படும். நினைவுகளில் அழியாத வி.எஸ். இன்னும் நம்முடன் வாழ்கிறார். உல கில் வசந்தம் வர மார்க்சியம் வழி காட்டியாக உள்ளது. இயக்கத்தி லிருந்து விலகி இருந்து அரசியல் பற்றி கம்யூனிஸ்டுகளால் சிந்திக்க முடியாது. வலதுசாரி இல்லாமல் போகும்; இதுதான் உண்மை. கேரள மக்கள் வி.எஸ்ஸை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்ப தற்கு துக்க ஊர்வலம் உள்ளிட்ட இறுதி நிகழ்ச்சிகள் ஒரு எடுத் துக்காட்டு. இரவு பகல் வித்தியாச மின்றி, மழையும் வெயிலும்  பொ ருட்டல்ல என இளம் தலைமுறை யின் முன்னேற்றத்தை வெளிப் படுத்தும் வகையில் வி.எஸ்ஸின் இறுதி நிகழ்ச்சி அமைந்தது.  இந்த நிகழ்ச்சி, புதிய தலைமுறை அரசிய லில் இருந்து விலகுவதாக பிரச்சா ரம் நடந்த நேரத்தில் அதற்கு எதி ராக மாறியது. ஆரம்பத்தில் இருந் தே பெண்களின் பங்கேற்பும் குறிப் பிடத்தக்கதாக இருந்தது” என எம்.வி. கோவிந்தன் கூறினார்.

ஆகஸ்ட் 1 வி.எஸ். நினைவஞ்சலி

மறைந்த மூத்த சிபிஎம் தலைவர் வி.எஸ். அச்சு தானந்தனின் நினைவாக ஆகஸ்ட் 1ஆம் தேதி  திருவனந்தபுரத்தில் ஒரு பெரிய இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்படும் என்று மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் தெரிவித்தார். சமூக-கலாச்சாரத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற் பார்கள். தொடர்ந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நினைவு நிகழ்ச்சிகள் நடைபெறும். நினைவு நிகழ்ச்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் எம்.வி. கோவிந்தன் கேட்டுக்கொண்டார்.