states

img

பாஜக பற்ற வைத்த வன்முறை நெருப்பால் மணிப்பூரில் கடுமையாக உயர்ந்த விலைவாசி!

இம்பால், மே 25- மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறை, பதற்றம் காரணமாக, அரிசி, தானியம், பெட் ரோல், சமையல் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந் துள்ளன. இது மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மணிப்பூர் மாநிலத்தில், ‘மெய்டெய்’ மக் களை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் நாகா, குக்கி  பழங்குடியினர் நடத்திய போராட்டம், அதற்கு  பதிலடியாக, பெரும்பான்மையாக இருக்கும்  மெய்டெய் மக்கள் நடத்திய பேரணி, 78 உயிர்  களை காவு வாங்கியது. ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். பல ஆயிரக்கணக்கான வீடு கள், கடைகள், வாகனங்கள் எரித்து சாம்ப லாக்கப்பட்டன.  நீண்ட முயற்சிக்குப் பிறகு, சற்று அமைதி  திரும்பியிருந்தது. ஆனால், இரண்டு நாட்  களுக்கு முன்பு மீண்டும் வன்முறை வெடித்தது. வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதில், பிஷ்ணு பூர் மாவட்டத்தின் மொய்ராங் பகுதியில் முகா மில் தங்கவைக்கப்பட்டிருந்த தொய்ஜாம் சந்திர மணி என்ற இளைஞர், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். 2 பேர் காயம் அடைந்தனர். கலவரம் பரவாமல் தடுக்க இணையச் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்ப துடன், சாலைப் போக்குவரத்தும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளன. இதனால், கடந்த  3 வாரங்களாகவே அத்தியாவசிய பொருட்க ளின் விலைகள் உயர்ந்து வந்தது. தற்போது  அது இரண்டு மடங்கு உயர்வைக் கண்டுள் ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 250 ஆக வும், கள்ளச் சந்தையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 2,000 ஆகவும் விற்கப்படு கிறது. 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.  900-இல் இருந்து ரூ. 1,800 ஆக உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு கிலோ ரூ. 100 ஆக உயர்ந்  துள்ளது. 30 முட்டைகள் கொண்ட அட்டை பெட்டி, ரூ. 180-ல் இருந்து ரூ. 300 ஆக உயர்ந்  துள்ளது. வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள், பழங்களின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்துள்ளன.

விலைவாசி உயர்வு ஒருபுறமிருக்க, அதிக  விலைகொடுத்தாலும், கடைகள் மூடியிருப்ப தால் மக்களால் எதையும் வாங்க முடியவில்லை.  கள்ளச்சந்தையில் அதிக பணம் செலவழித்து  வாங்க முடிந்தவர்கள் மட்டுமே வாங்கு கிறார்கள். ஏழைகள் வாங்க இயலாமல் தவிக்  கின்றனர். கலவரம் பாதித்த பகுதி மட்டுமல்லாமல், கலவரத்தால் பாதிக்கப்படாத மாவட்டங்க ளிலும் விலைவாசி உயர்ந்துள்ளதால் பொது மக்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வரு கின்றனர். ஆடு, கோழிகள் அதிகம் கிடைப்ப தால் இறைச்சி விலை மட்டும் உயரவில்லை என தகவல்கள் கூறுகின்றன. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவரும்  லாரிகளுக்கு, பாதுகாப்புப் படையினர் காவ லாக சென்று வருகின்றனர். அவ்வாறில்லா விட்டால், அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்னும் அதிகமாக உயரும் என்று கூறப்படுகிறது. மணிப்பூர் மக்கள் தொகையில் 53 சதவிகி தமாக இருக்கும் ‘மெய்டெய்’ மக்களின் வாக்கு களைப் பெறுவதற்காக, அவர்களுக்கு பழங்குடி யினர் அந்தஸ்து தருவதாக பாஜக ஆசை காட்டியது. அதன்மூலமே ஆட்சியையும் பிடித்  தது. ஆனால், உறுதியளித்தபடி பழங்குடியினர் அந்தஸ்து வழங்காத நிலையில், மணிப்பூர் மாநி லமாகவே தற்போது வன்முறைக்காடாக மாறி யுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக அமைச்சரின்  வீட்டிற்குத் தீவைத்த மக்கள்!

பிஷ்ணுபூர் (Bishnupur) மாவட்டத்தில் உள்ள பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் கோவிந்  தாஸின் வீடு வன்முறையாளர்களால் தீவைத்து  எரிக்கப்பட்டு உள்ளது. அப்போது அமைச்ச ரும், அவரது குடும்பத்தினரும் வீட்டில் இல்லாத தால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. வன்முறை யிலிருந்து தங்களைப் பாதுகாக்க எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய பெண்கள், ஆதங்கத்தில் அமைச்சர் வீட்டை தீயிட்டு எரித்துள்ளனர்.  முன்னதாக பிஷ்ணுபூரில் அரங்கேறிய வன்  முறைக்கு, முன்னாள் எம்எல்ஏ தங்சலம், அவ ரது மகன் உள்ளிட்ட 4 பேர் கடைகளை அடைக்கு மாறு வணிகர்களை மிரட்டியதே தொடக்கம் என்று கூறப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப்படை யினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டுள்ளனர். ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் நிலைமை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

;