புதுதில்லி, டிச.21- பாஜக பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த நூற்றுக்கணக்கானோ ருக்கு, அக்கட்சியின் நிர்வாகிகள் மது பானத்தை ஊற்றிக் கொடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள இந்திய இளைஞர் காங்கி ரசின் தேசியத் தலைவர் பி.வி. ஸ்ரீனி வாஸ், ‘அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற பிரதமர் மோடியின் வாக்கி யத்தை குறிப்பிட்டு ‘மதுபானத்துடன் அனைவருக்குமான வளர்ச்சி’ என விமர்சனம் செய்துள்ளார். மேலும் இந்த வீடியோவை ஒன் றிய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு டேக் செய்துள்ள பி.வி. ஸ்ரீனிவாஸ், “அன்புள்ள ஸ்மிருதி இரானி, மோடி இந்த ‘கங்காஜலை’ பக்தர்களுக்கு விநியோகித்தார்... இது வலிநிவாரணி தானே? என்று கிண்டலாக கேள்வி ஒன்றையும் எழுப்பியுள்ளார்.