புதுதில்லி, ஜூலை 25 - மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு இழைக் கப்பட்டிருக்கும் கொடுமை உலகளாவிய அள வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலை யில், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி ஏற்கெனவே தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். “நான் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை. இதைப்பற்றி நான் இப்போதுதான் முதன்முறை யாகக் கேள்விப்படுகிறேன். ஆனால், நான் முன்பே கூறியது போல் உலகில் எங்கு மனித அவலம் நடந்தாலும் அதுகுறித்து நாங்கள் (அமெரிக்கா) வேதனையடைவோம்” என்று கூறியிருந்தார். “எங்கள் எண்ணங்கள் இந்திய மக்களுடன் உள்ளன. ஆனால், இது இந்தியா வின் உள்நாட்டுப் பிரச்சனை. இத்தகைய வலி மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் மக்க ளுக்கு எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள் கிறோம்” என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மணிப்பூரில் நடைபெறும் வன்முறை, ஒன்றிய மற்றும் மாநில பாஜக அர சுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் குறித்து, அமெரிக்க வெளியுற வுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூவ் மில் லரும் தனது கவலையைப் பதிவுசெய்துள்ளார். “மணிப்பூர் சம்பவம் மிருகத்தனமானது மற்றும் பயங்கரமானது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா தனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார். மேலும், மணிப் பூரில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளை அமெரிக்கா வரவேற்பதாகவும், அனைத்து குழுக்கள், வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங் களைப் பாதுகாக்கும் அதே வேளையில் மனிதா பிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் மேத்யூவ் மில்லர் வலி யுறுத்தியுள்ளார்.