7 கட்டமாக நடைபெறும் மக்கள வை தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19 அன்று தொடங்குகிறது. மக்களவை தேர்தல் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய கட்சி என்று மார்தட்டிக் கொண்டாலும், பாஜக மாற்றுக் கட்சியினரை வைத்து அர சியல் பிழைப்பு நடத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுவரை அறிவிக்கப் பட்டுள்ள 417 பாஜக வேட்பாளர்களில் 116 வேட்பாளர்கள் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), சமாஜ்வாதி, பிஆர்எஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியின ரைச் சேர்ந்தவர்கள் தான். அதாவது பாஜகவின் மொத்த வேட்பாளர்கள் பட்டிய லில் மாற்றுக் கட்சியினரைச் சேர்ந்த வர்கள் 40% பேர். எதிர்கட்சியினரை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை நரேந்திர மோடி என்ற ஒற்றை மனி தரை தோற்கடிக்க “இந்தியா” என்ற பெய ரில் 28க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றி ணைந்துள்ளதாக பாஜகவினர் அடிக்கடி விமர்சித்து வருகின்றனர். ஆனால் மக்க ளவைத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தக் கூட ஆள் இல்லாமல் எதிர்க்கட்சியினரை சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை வைத்து மிரட்டியும், குதிரை பேரம் மூலம் தங்கள் பக்கம் வளைத்தும் வேட்பாளராக களமிறங்கியுள்ளது பாஜக. 400 தொகுதிக்கு சொந்தமாக வேட்பா ளர் நிறுத்தக்கூட ஆள் இல்லாத கட்சி யான பாஜக, “இந்தியா” கூட்டணி பற்றி பேசக் கூட தகுதியில்லை என சமூகவலைத் தளங்களில் நெட்டிசன்கள் கருத்து மழை யுடன் விமர்சித்து வருகின்றனர்.