உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியர் காலிப்பணி யிடங்களை நிரப்பக் கோரி, மெழுகுவர்த்தி ஊர் வலம் நடத்தியவர்கள் மீது அம்மாநில பாஜக அரசின் காவல்துறை நடத்திய தடியடியை அதே கட்சியைச் சேர்ந்த எம்.பி. வருண் காந்தி கண் டித்துள்ளளார். “உத்தரப்பிரதேசத்தில் தடியடிக்கு உள்ளானவர்களும் பாரத மாதாவின் குழந்தைகள்தான்” என்று ஆதித்யநாத் அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ள வருண் காந்தி, போராட்டத்தில் கலந்து கொண்ட வர்கள் உங்கள் குழந்தைகளாக இருந்திருந்தால், இதுபோன்ற போன்ற நடவடிக்கையை அவர்கள் எதிர்கொண்டிருப்பார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.