உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹாத்ரஸ் மாவட்டத்தில் “போ லிச் சாமியார்” போலே பாபா பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 123 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு பிறகு போலே பாபாவின் பாலியல் வக்கிரம் கலந்த சொகுசு வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்து பெரும் சர்ச்சை நிகழ்வாக வெடித்துள்ளது. மோடி பிரதமர் ஆன பின்பு சாமி யார்கள், துபாய் மன்னர் அளவுக்கு சொகுசு வாழ்க்கை வாழ்வது நாட றிந்த விஷயம் தான். “போலிச்சாமி யார் போலே பாபா”வின் சொகுசு வாழ்க்கையும் அதே போலவே உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் எட்டவா மாவட்டத்தில் உள்ள பகதூர் நகரி கிராமத்தைச் சேர்ந்தவர் போலே பாபா. இவரின் இயற்பெயர் சூரஜ் பால் சிங். காவல்துறையில் கான்ஸ்டபி ளாக பணியாற்றி, 1997இல் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு தகுந்த ஆதாரங்கள் இல்லை என விடுதலை செய்யப்பட்டார். ஆயினும் கைது நடவடிக்கை காரண மாக சூரஜ் பால் பணி நீக்கம் செய்யப் பட்டார். எனினும் ஆன்மீக சேவைக் காக காவல்துறையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றதாகக் கூறி, தனது பெய ரை நாராயண் சாகர் ஹரி என மாற்றி போ லிச் சாமியாராக உருவெடுத்தார். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் நாராயண் சாகர் ஹரிக்கு ஆதரவாளர்கள் பெருகிய நிலையில், நாளடைவில் தனது பெயரை “போலே பாபா” என மாற்றிக் கொண்டார். மீண்டும் கைது... பாபாவாக உருவெடுத்த பிறகு ஆக்ராவில் 2000இல் நடைபெற்ற கூட்டத்தில் உடல்நலம் குன்றி இறந்த தாக தனது வளர்ப்புப் பெண்ணை வைத்து கூட்டத்தில் பிரார்த்தனை செய்து, தன் மகிமையால் அப்பெண் உயிர்ந்தெழுந்ததாக பொதுமக்க ளை நம்ப வைத்துள்ளார். பிறகு இந்தப் பெண்ணை ஆக்ராவில் ஒரு சுடுகாட்டில் எரிக்க முயன்றபோது பிடிபட்டு, பாபாவுடன் சேர்த்து 7 பேரை ஆக்ரா போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு இந்த வழக்கிலும் ஆதாரங்கள் இல்லை என பாபா விடுவிக்கப்பட்டது சந்தே கத்தை கிளப்பியது. தொடர்ந்து ஹாத்ரஸ் சம்பவம் நிகழ்ந்த பின்பு தலைமறைவான போலே பாபா மீது ஏற்கனவே 5 பலாத் கார வழக்குகள் நிலுவையில் உள்ள தாக அதிர்ச்சி தகவல் ஒன்றும் வெளி யாகியது. இந்நிலையில், தற்போது போலிச்சாமியார் பாபாவுக்கு ரூ.100க்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாபாவுக்கு மாநிலம் முழுக்க 24 ஆசிரமங்கள் உள்ளன. இதில் அவர் தங்கும் ஆசிரமம் 21 ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்து உள்ளது. இதற்கு “ஹரி நகர்” என்று பெயரிட்டுள்ளார். இதில் 13 ஏக்கரில் 5 நட்சத்திர ஹோட்டல் போல சொகுசு ஆசிரமத்தை கட்டியுள் ளார். அந்த ஆசிரமத்தில் பாபாவுக் கும், அவரது மனைவிக்கும் பிரத்தியேக மாக ஆறு அறைகள் சில ஒதுக்கப் பட்டுள்ளன. ஆசிரமத்தில் பல அறை கள், விலை உயர்ந்த பொருட்கள் மூலம் அறைகள் அழகுப்படுத்தப்பட்டுள்ளன. பாபாவின் ஆசிரமங்கள், சொகுசு கார்கள், பவுன்சர்களின் இருசக்கர வாகனம் என குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள் ளது. ஆசிரமத்தில் கண்காணிப்பு கோபுரங்கள், உயரமான சுவர்கள், பிரமாண்டமான நுழைவு வாயில் என ஒரு கோட்டையைப் போல உள்ளது. ஆசிரமங்களில் வீடியோ எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நன்கொடை இல்லை என்றால் எப்படி இவ்வளவு சொத்து? பாபா தன்னுடைய பக்தர்கள் உட்பட யாரிடமும் நன்கொடைகள் வாங்குவதில்லை என அடிக்கடி கூறி வருகிறார். பிறகு எப்படி இவ்வளவு சொத்து சேர்ந்தது என்ற கேள்வி கிளம்பியுள்ள நிலையில், அவரது மெயின்புரி ஆசிரமத்தின் நுழைவா யிலில் குறைந்தபட்சம் ரூ. 10,000 முதல் அதிகபட்சம் ரூ. 2.5 லட்சம் வரை நன்கொடை அளித்த 200 பெயர் கள் பதித்த ஒரு பலகை ஒன்று காட்சி க்கு வைக்கப்பட்டுள்ளதன் மூலம் போலிச்சாமியார் போலே பாபா நன் கொடைகள் மூலமே சொத்துக்களை குவித்துள்ளது அம்பலமாகியுள்ளது.