states

img

பண மதிப்பு நீக்கம் தவறான முடிவென அறிவிக்க வேண்டும்!

புதுதில்லி, நவ. 25 - 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி  ஒன்றிய அரசு மேற்கொண்ட பண மதிப்பு நீக்க நட வடிக்கையில் சட்டமீறல்கள் உள்ளதாகவும், நிர்வாக உத்தரவு மூலம் கரன்சி நோட்டுகளை ரத்து செய்யும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்றும் உச்ச நீதி மன்றத்தில் 58 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அப்போதே அர சியல் சாசன அமர்வு விசா ரணைக்கு மாற்றப்பட்டன.  இதன்மீதான விசாரணை யை நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன், பி.வி.  நாகரத்னா ஆகிய 5 நீதிபதி களைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு நடத்தி வரு கிறது. இந்த வழக்கு வியாழ னன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ப. சிதம்பரம் ஆஜராகி வாதாடினார்.

அப்போது, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு வழி வகுத்த முடிவெடுக்கும் செயல்முறை ‘ஆழமான குறைபாடு’ கொண்டது என்று கூறினார். பண மதிப்பு நீக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட சட்ட நடைமுறைகள் குறித்த ஆவ ணங்களைத் தாங்கள் பார்க்க விரும்புவதாக நீதிபதி எஸ். அப்துல் நசீர் கூறியிருந்த நிலையில், ஒன்றிய அரசு இதுதொடர்பான இன்னும் நான்கு முக்கியமான ஆவ ணங்களை ‘தடுத்து வைத் திருக்கிறது’ என்று ப. சிதம் பரம் குற்றம் சாட்டினார்.  “இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு நவம்பர் 7ஆம் தேதி எழுதிய கடிதம், ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் முன் வைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் குறிப்பு, மத்திய வாரியக் கூட்ட நிமிடங்கள் மற்றும் அவற்றின் பரிந்துரைகள் மற்றும் உண்மையான அமைச்சரவை முடிவு ஆகி யவை இன்னும் காட்டப்பட வில்லை. ஆறு ஆண்டுகள் கடந்தும் இந்த ஆவணங்கள் இன்னும் பொது களத்தில் வைக்கப்படவில்லை. நவம்பர் 8-ஆம் தேதி  நடைபெற்ற மத்தியவாரி யத்தின் முக்கியமான கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யார், இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம்- 1934ன் கீழ் நிர்ண யிக்கப்பட்ட குறைந்தபட்ச இயக்குநர்களின் எண்ணி க்கை மற்றும் உருவாக்கப் பட்ட விதிகள் மற்றும் விதி முறைகளின் கீழ் இயக்குநர் களுக்கு முன் அறிவிப்பு  கொடுப்பது தொடர்பான விதிகள் கடைபிடிக்கப் பட்டதா? என்ற விவரங்கள் இல்லை.

பணமதிப்பு நீக்கம் தொடர்பான முழு நடை முறையும் சுமார் 26 மணி நேரத்தில் செய்யப்பட்ட தாக எனது கணக்கீடு காட்டு கிறது. கடிதம் நவம்பர் 7-ம் தேதி பிற்பகலுக்குப் பிறகு ரிசர்வ் வங்கிக்கு வருகிறது. அதன் பிறகு நவம்பர் 8-ம் தேதி தில்லிக்கு சந்திக்க வரு மாறு மத்திய வாரியத்திற்கு தொலைபேசியில் அழைப்பு தரப்பட்டது. மாலை 5:30  மணிக்கு சந்திப்பு நடக்கிறது.  ஒரு மணி நேரம் அல்லது  ஒன்றரை மணி நேரத்திற் குள், அங்குவந்த பரிந்துரை கள் கையோடு அமைச்சர வைக்கு எடுத்துச் செல்லப் படுகிறது. பின்னர், பிரதமர் இரவு 8 மணிக்கு தொலைக் காட்சியில் தோன்றி பண மதிப்பு நீக்கத்தை அறி விக்கிறார். இது மிகவும் மூர்க்கத்தனமான முடி வெடுக்கும் செயல்முறை யாகும். மேலும், இது சட்டத்தின் ஆட்சியை கேலி செய்கிறது. ஒன்றிய அரசோ  அல்லது ரிசர்வ் வங்கியோ  தங்கள் எதிர் பிரமாணப் பத்தி ரங்களில் முடிவெடுக்கும் செயல்முறை தொடர்பான பொருள் விவரங்களை அளிக்கவில்லை. ஒன்றிய அரசும் வங்கியும் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங் களுக்கு இடையே முரண்பாடுகள் உள்ளன. 

ரிசர்வ் வங்கி மட்டுமே ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கு உரிமை கொண்டது. ஒன்றிய அரசு தன்னிச்சையாக இதை செய்ய முடியாது. ஆனால், சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகை யில் ஒன்றிய அரசு முற்றி லும் தவறான முடிவை எடுத் துள்ளது. இதனால் ஏற்படப் போகும், பாதிப்புகளை ஆராயவில்லை. அரசு அச்ச கத்தால் மாதத்துக்கு ரூ. 300 கோடி ரொக்கம் மட்டுமே அச்சடிக்க முடியும் என்ற நிலையில், அதனைக் கருத்தில் கொள்ளாமல் ஒரே  இரவில், ரூ. 2,300 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டது. ரூ.  2000 நோட்டுகளை விநி யோகிக்க 21 லட்சத்து 25  ஆயிரம் ஏடிஎம்-கள் மாற்றி யமைக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை. இவ்வளவுக்குப் பிறகும்,  2016-17 ஆண்டு அறிக்கை யில் வெறும் ரூ. 43 கோடிக்கே கள்ள ரூபாய் நோட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. பண  மதிப்பு நீக்க நடவடிக்கை யின் குறிக்கோள் எங்கே நிறைவேறியிருக்கிறது? பயங்கரவாதிகளுக்கு கள்ள  நோட்டுகள் வழங்கப்படுவ தாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  கொல்லப்பட்ட பயங்கர வாதிகளிடம் புதிய  2,000 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 99.3 சதவிகித பணம் திரும்பி வந்துவிட்டதாக ரிசா்வ் வங்கி அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பணமாக பதுக்கி வைக்கப் பட்டிருந்த ரூ.1000, ரூ.  500 நோட்டுகள் செல்லுபடி யாகும் பணமாக மாற்றப்  பட்டுவிட்டது என்பதே இந்த முழு நடவடிக்கையின் இறுதி முடிவாகும். ஆனால், இந்த நடவடிக்கையால் நூற்றுக்கணக்கானோா் உயிர்களையும், வாழ்வா தாரத்தையும் இழந்து நிற்கின்றனர். எனவே, பண  மதிப்பு நீக்கம் நடவடிக்கை முற்றிலும் தவறான முடிவு என நீதிமன்றம் உத்தர விட்டால், வருங்காலத்தில் இதுபோன்ற தவறான நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபடாது. இவ்வாறு ப. சிதம்பரம் வாதிட்டார். தற்போது இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.