புதுதில்லி, ஜூலை 5- மணிப்பூரின் உண்மை நிலையை அறிந்துவர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்களின் குழு மணிப்பூர் செல்கிறது. இது தொடர்பாகக் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது: மணிப்பூரில் மிக மோசமான கொந்த ளிப்பு நிலையும் தொடர்கிறது. மரணங்கள் தொடர்கின்றன. மக்கள் நிவாரண முகாம் களுக்கும்; புகலிடம் தேடி பல்வேறு இடங்க ளுக்குச் செல்லும் நிலை தொடர்கிறது. மாநி லம் முழுவதும் அவநம்பிக்கை மற்றும் பாது காப்பற்ற சூழ்நிலை இருந்து வருகிறது. இணையத்தில் (internet) மணிப்பூரை, நாட்டின் இதர பகுதிகளிலிருந்து துண்டித்தி ருப்பது தொடர்கிறது. துரதிர்ஷ்டவசமாக, மணிப்பூரில் உள்ள பல்வேறு இனக்குழுக் களின் அவலநிலையை ஒளிபரப்பிட பிர தான ஊடகங்களில் பெரும்பாலானவை முன்வரவில்லை. ‘‘இரட்டை என்ஜின்’’ அரசாங்கத்தின் எலும்புக் கூடு இப்போது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கி இருக்கின்றன. பிரதமரும், உள்துறை அமைச்சர் உட்பட அவருடைய நம்பகமான கையாட்களும் மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளை அரித்து வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவல் நடவடிக்கைகளுக்குத்தான் பெரிய அளவில் ஆர்வத்துடன் ஈடுபட்டி ருக்கிறார்கள். மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலை உடனடியாகத் திரும்ப வேண்டும்; பிளவு வாத அரசியலின் அடையாளமாகத் திகழ்ப வரும், பதவியில் அவர் நீடித்திருப்பதற்கான அனைத்துத் தகுதிகளையும் இழந்துவிட்ட, முதலமைச்சர் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதுதான் போரா டும் மணிப்பூர் மக்களின் பிரதான கோரிக்கை யாகத் தொடர்கிறது.
இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து, தலைநகர் புதுதில்லியில் ஜூன் 25 அன்று நடைபெற்ற தேசிய சிறப்பு மாநாட்டில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 10 அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஜில்லா பரி ஷத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பி னர்களும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மாநாட்டில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சியும், அவதிக்கு ஆளா கியுள்ள மணிப்பூர் மக்களுக்குத் தங்கள் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்வ தற்காகவும், அங்குள்ள கள நிலைமைகளை ஆய்வு செய்திடவும், இயல்பு நிலையை மீளவும் ஏற்படுத்திட அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திடவும், மணிப்பூருக்கு ஜூலை 6-8 தேதிகளில் தங்கள் கட்சி களைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கொண்ட குழுவை அனுப்பி வைத்தி டத் தீர்மானித்துள்ளன. தூதுக் குழுவினர் மாநிலத்தில் சூர சந்த்பூர் (Churachandpur) மற்றும் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து இனத்தைச் சேர்ந்த மக்களையும் சந்திக்கி றார்கள். தூதுக்குழுவினர் ஜூலை 7 அன்று மாலை 5 மணியளவில் ஆளுநரைச் சந்திக்கி றார்கள். தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஜூலை 8 அன்று அவர்கள் ஊடகங்களையும் சந்திக்கிறார்கள். இத்தூதுக்குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநி லங்களவை உறுப்பினர்களான பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா மற்றும் ஜான் பிரிட்டாஸ் ஆகியோரும், இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயனும், மாநிலங்க ளவை உறுப்பினர்கள் பினோய் விஸ்வம் மற்றும் சந்தோஷ் குமார்.பி ஆகியோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.