states

img

இனப்படுகொலைக்கு உடந்தையான அமெ.மருத்துவ சங்கம்

வாஷிங்டன், ஜூன் 11- ஜூன் 8  அன்று  அமெரிக்காவின் சிக்காகோ  நகரில் அமெரிக்க மருத்துவ சங்கம்  (அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேசன்) அரங்கிற்கு வெளியே, சுகாதார ஊழி யர்கள், மருத்துவர்கள்  இஸ்ரேலின் இனப்படு கொலை தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும்  அதிக செல்வாக்கு கொண்ட அமெரிக்க மருத்துவ சங்கம் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.  இனப்படுகொலைக்கு எதிரான மருத்து வர்கள் அமைப்பு, செவிலியர்கள் சங்கம் ஆகி யவை இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றன. பாலஸ்தீனத்திற்கான சுகாதார ஊழியர் அமைப்பின்  எமிலி ஹேக்கர் பேசிய போது   ‘காசாவில் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குகிறது. மருத்துவ ஊழியர்களை குறி வைத்து தாக்குகிறது.  போயிங், லாக்கீட் மார்ட்டீன் போன்ற முன்னணி நிறுவனங்களை விட அதிக செல்வாக்கு படைத்த அமெரிக்க மருத்துவ சங்க அமைப்பு போர் நிறுத்தத்திற்கு அழு த்தம் கொடுக்க வேண்டும் என கூறினார்.  மேலும்  2.6 கோடி அமெரிக்கர்களுக்கு சுகாதார காப்பீடு இல்லை. இன்சுலின் வாங்கக்  கூட மக்களிடம் பணம் இல்லை. ஆனால் இஸ்ரேலின் இனப்படு கொலைக்கான  குண்டுகள் தயாரிக்க மட்டும் அமெரிக்க அரசிடம் பணம் உள்ளது.  அதே போல உக்ரைனுக்கு ஒரு லட்சம் டாலர் நிதி உதவி செய்தது மற்றும் உக்ரைன் மருத்துவர்களுக்கு  500 குண்டு துளைக்காத கவச உடைகளை அமெரிக்க மருத்துவ சங்கம் வழங்கியது.  பாலஸ்தீனத்தில் 534 சுகாதார ஊழியர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  அவர் களுக்கு அமெரிக்க மருத்துவ சங்கம் எந்த உதவியும் அளிக்கவில்லை. இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு அமெரிக்க மருத்துவ சங்கம்  உடந்தையாகச்  செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்.