புதுதில்லி, டிச.22- வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். அப்போது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தையடுத்து நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரி வித்து நடப்பு குளிர்கால கூட்டத்தொட ரில் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்ட த்தில் ஈடுபட்டன. லக்கிம்பூர் கெரியில் கார் ஏற்றி விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடனும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான புதனன்றும் எதிர்க்கட்சி எம்.பி. க்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சி தலை வர்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். தேசிய கீதம் பாடியும், அர சியலமைப்பு சட்டத்தை வாசித்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் போராட்டத்தின் நோக்கத்தை வெளிப் படுத்தினர்.
போராட்டம் குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி யின் மாநிலங்களவை தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, “எவ்வாறாயினும், மசோதாக்கள் எந்த விவாதமும் இல்லாமல் எளிதாக நிறைவேற்றப்படு வதை உறுதி செய்வதற்காகவே அரசு இடைநீக்க நடவடிக்கையை திட்ட மிட்டு மேற்கொண்டது என்றார். மேலும் சபை சுமூகமாக நடைபெறுவதற்காக இடைநிறுத்தத்தை திரும்பப் பெறு மாறு நாங்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தோம், ஆனால் மறுத்துவிட்ட னர். இப்போது ஒன்றிய அரசு எதிர்க் கட்சிகளைக் குற்றம் சாட்டுகிறது என்றார்.