states

img

ஒவ்வொருவரின் மரபணுவும் தனித்துவமானது என்பவரே இந்து!

புதுதில்லி, டிச.20- இந்துக்கள் வேறு; இந்துத்துவா வாதிகள் வேறு என்று காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தி தொடர்ந்து வித்தி யாசப்படுத்தி வருகிறார்.  உதாரணமாக மகாத்மா காந்தி இந்து; அவரைக் கொலை செய்த கோட்சே இந்துத்துவாவாதி; அனைத்து மதத்தினருக்கும் உரிய மரியாதை தருபவர்கள் உண்மை யான இந்துக்கள்; அதிகாரத் தேட லில் மட்டுமே இருப்பவர்கள் இந்துத் துவாவாதிகள் என்று கூறினார். ஒருபுறம் இந்து, மறுபுறம் இந்துத் துவாவாதி. அதாவது, உண்மையும், அன்பும், அகிம்சையும் ஒருபுறம் என்றால். பொய்மையும், வெறுப்பும், வன்முறையும் மறுபுறம் நிற்கின்றன. இந்தியாவில் இப்போது நடை பெறும் போட்டி இந்துவுக்கும், இந்துத் துவாவாதிக்கும் இடையிலானது.

ஒரு புறம் அன்பைப் பரப்பும் இந்துக்களும், இன்னொரு புறம் பதவியைப் பிடிக்க வெறுப்பை பரப்பும் இந்துத்துவாவாதி களுமாக இருக்கின்றனர். ஓர் இந்து தனது ஆயுள் முழு வதும் மெய்வழியில் நடக்கிறார். உண்மைக்காகப் போராடுபவராக இருக்கிறார். ஓர் இந்து தனது சவால் களை எதிர்கொள்கிறார். இந்துத்துவா வாதியோ (மோடி போன்றோர்) அர சியல் செய்கிறார். பொய்களைப் பரப்பு கிறார். எப்படியாவது ஆட்சி அதி காரத்தைக் கைப்பற்ற முயல்கிறார் என்று விளக்கம் அளித்தார்.  பிரதமர் நரேந்திர மோடி கங்கை யில் நீராடிய சம்பவத்தையும் ராகுல் விடவில்லை. அதனை வைத்தும் அவர் ‘இந்து; இந்துத்துவா’ வேறு பாட்டை விளக்கினார். “இந்துத்துவா வாதி என்பவர் கங்கையில் தான் மட்டுமே தனியாக நீராடுவார்.

ஆனால், ஒரு இந்து கோடிக்கணக் கான மக்களுடன் சங்கமிப்பார்” என்று, ஆர்எஸ்எஸ், பாஜகவின் இந்துத் துவா அரசியலுக்கும், இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லை என்றார். இதனிடையே, ஆர்எஸ்எஸ் தலை வர் மோகன் பகவத், தர்மசாலாவில் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசும் போது, “இந்தியர்களின் மரபணு 40 ஆயிரம் ஆண்டுகளாக ஒன்று தான்.

நமது மூதாதையர்கள் ஒரே குலத்தவர்தான். அந்த மூதாதை யர்களால்தான் நாடு வளம் பெற்றது. கலாச்சாரமும் பாரம்பரியமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார். இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே உள்ளனர். குறிப்பிட்ட எண்ணிக்கை யினர் முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற மதங்களுக்கு சென்றிருந்தாலும், அவர்களும் இந்துக்கள்தான்.. அவர்கள் இந்துக்களாகவே உணர வேண்டும் என்பதுதான் அவரது பேச்சின் சாரமாக இருந்தது. இந்நிலையில், பகவத்தின் பேச்சை வைத்தும் ‘இந்து - இந்துத்துவா’ வேறுபாட்டை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். “ஒவ்வொரு மனிதரின் மர பணுவும் வெவ்வேறானது, தனித்துவ மானது என இந்துக்கள் நம்புவார்கள். ஆனால், இந்துத்துவா மீது நம்பிக்கை யிருப்பவர்கள்தான் அனைத்து மக்களின் மரபணுவும் ஒரே மாதிரி யானது என்று பேசுவார்கள்” என டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

;