states

img

மரபை மீறுகிறாரா தலைமை நீதிபதி யு.யு. லலித்?

புதுதில்லி, அக்.8- இந்தியாவில் கொலீஜியம் அமைப்பின் பரிந்துரை அடிப்படையிலேயே, உச்ச நீதிமன்ற  மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப் பட்டு வருகின்றனர். உச்ச நீதிமன்றத் தலைமை  நீதிபதி தலைமையில் நான்கு மூத்த நீதிபதி களைக் கொண்டதுதான் கொலீஜியம் அமைப்  பாகும். அதன்படி, தற்போது கொலீஜியம் அமைப்  பில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில், உச்ச நீதிமன்ற மூத்த நீதி பதிகளான டி.ஒய். சந்திரசூட், எஸ்.கே. கவுல்,  எஸ். அப்துல் நசீர் மற்றும் கே.எம். ஜோசப் ஆகி யோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரவி சங்கர் ஜா, பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை  நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் குமார்  மற்றும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறி ஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை உச்சநீதி மன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு, தற்போ தைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக  உள்ள யு.யு. லலித், தனது முன்மொழிவை கொலி ஜியம் அமைப்பின் மற்ற நீதிபதிகளுக்கு எழுத்  துப்பூர்வமாக அனுப்பியது சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. தலைமை நீதிபதி ஒருவர், கொலீஜியத் தைக் கூட்டாமல், தான் மட்டுமே பெயர்களை முன்மொழிந்தது, வரலாற்றில் இதற்கு முன்பு இல்லாதது என்று கூறப்படுகிறது. எனவே, கொலீஜியம் அமைப்பில் இடம் பிடித்துள்ள இரு நீதிபதிகளே தங்களது எதிர்ப்  பினை பதிவு செய்துள்ளனர். நேருக்கு நேர்  கலந்தாலோசிப்பதற்குப் பதிலாக, “கொலிஜி யம் கூட்டத்தை சுழற்சி முறையில் நடத்துவது”  என்பது கேள்விப்படாதது என்றும், அதில் “தாங்  கள் ஒரு கட்சியாக இருக்க முடியாது” என்றும்  அவர்கள் கூறியிருப்பதாக ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளன.

மேலும், உச்ச நீதிமன்ற நியமனங்களுக் கான பெயர்களை தலைமை நீதிபதியின் முன்  மொழிவு மூலம் செய்ய முடியாது என்பதையும்  அவர்கள் அக்டோபர் 1-ஆம் தேதி தலைமை நீதி பதிக்கு தனித்தனி கடிதம் வாயிலாக தெரிவித்தி ருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்னதாக, செப்டம்பர் 30 ஆம் தேதி திட்டமி டப்பட்டிருந்த கொலிஜியம் கூட்டம் நடைபெற வில்லை. தசரா விடுமுறைக்கு முந்தைய செம் டம்பர் 30 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் கடைசி வேலை நாளாக இருப்பதால், நீதிபதி டி.ஒய்.  சந்திரசூட் தலைமையிலான அமர்வு அதற்கு  முன்பு பட்டியலிடப்பட்ட அனைத்து வழக்கு களையும் இரவு 9.10 மணி வரை விசாரித்துள் ளது. இதனால், அவர் கூட்டத்தில் கலந்து  கொள்ள முடியவில்லை என்றும், இதனா லேயே தலைமை நீதிபதி அவருக்கு கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில், தலைமை நீதிபதி  யு.யு. லலித் நவம்பர் 8-ஆம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், மரபின்படி, அவர் ஓய்வு பெறு வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அடுத்த  தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைப்பார்; அவ்வாறு பரிந்துரை செய்தபின், நீதிபதிகள் நியமனம் தொடர்பான முடிவுகளை எடுப்ப தைத் தவிர்த்து, அந்தப் பணியை புதிய தலைமை நீதிபதியிடம் விட்டுவிடுவார்.

முன்பு தடுத்தவர் இப்போது செய்வதேன்?

தலைமை நீதிபதியாக பதவி வகித்த என்.வி.  ரமணா, இரண்டு நீதிபதிகளின் நியமனங்க ளுக்கு பரிந்துரை செய்யவிருந்த நிலையில், இதே மரபை காரணம் காட்டித்தான் யு.யு.  லலித் முன்பு அந்த நியமனங்களை தடுத்திருந்  தார். ஆனால், அதே யு.யு. லலித் இன்று தலைமை நீதிபதியாக இருக்கும் போது, தான் முன்பு கூடியபடி நடந்து கொள்ளவில்லை.  ஒரு மாதத்திற்கும் குறைவாகவே அவரது  பதவிக் காலம் உள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரை செய்  யாததுடன், புதிய நீதிபதிகள் நியமனத்திற்கும் கொலீஜியத்தை கூட்டி ஒருமித்த முன்மொழி வை உருவாக்குவதற்குப் பதில், தன்னிச்சை யாக முன்மொழிவுகளை அனுப்பியுள்ளார். கொலீஜியத்திற்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வும், தலைமை நீதிபதியின் முன்மொழிவுடன் ஏனைய நீதிபதிகள் உடன்படாததற்கும் இதுவே  முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இதனிடையேதான், ஓய்வு பெறுவதற்கு 1 மாதம் கூட இல்லாத நிலையில், உச்ச நீதி மன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்  துரையை செய்யுமாறு யு.யு. லலித்திற்கு ஒன்  றிய அரசின் சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி யுள்ளது. இவ்வாறு கடிதம் எழுதியிருப்பதை டுவிட்டரிலும் சட்டத்துறை அமைச்சகம் பகிர்ந்து  கொண்டது. இவ்வாறு கடிதத்தை வெளியில் பகிர்ந்து கொள்வது நடைமுறையில் இல்லாத ஒன்று என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

;