states

img

ரூ.2,450 கோடியில் 332 அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தார் பினராயி விஜயன்

ரூ.2,450 கோடியில் 332 அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தார்  பினராயி விஜயன்'

கேரள அரசால், மறுவாழ்வு (புனர்கேஹம்) திட்டத்தின் கீழ் மீனவ குடும்பங்களுக்காக திருவனந்தபுரம் முட்டத்தறாவில் கட்டப் பட்ட ‘பிரத்யக்ஸா’ அடுக்குமாடி குடி யிருப்பு வளாகத்தை வியாழன்று (ஆகஸ்ட் 6) முதலமைச்சர் பினராயி விஜயன் திறந்து வைத்து 332 வீடுக ளுக்கான சாவிகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தார். கட்டி முடிக்கப்பட்ட 400 அடுக்கு மாடி குடியிருப்புகளில் 332  குடியிருப்பு களின் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. இவற்றில் 162 குடும்பங்கள் வாடகை வீடு களில் வசிப்பவர்களாவர். புனர்கேஹம் கடலோர மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டு முட்டத்தறா கிராமத்தில் வீட்டுவசதி வளாகத்தின் கட்டுமானம் தொடங்கியது. பால்வள மேம்பாட்டுத் துறையிலிருந்து மீன்வளத் துறைக்கு ஒப்படைக்கப்பட்ட 8 ஏக்கரில் ரூ.81 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அரசாங்கம் நிர்வாக ஒப்புதல் அளித்தது. கட்டுமா னப் பணிகளை ஊராளுங்கள் தொழிலா ளர் ஒப்பந்த கூட்டுறவு சங்கம் மேற்கொண்டு வருகிறது. தொழில்நுட்ப மேற்பார்வையை துறைமுக பொறி யியல் துறை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.