states

ஒமைக்ரானை கண்டறியும் டாடா நிறுவன கருவிக்கு அனுமதி

புதுதில்லி,ஜன.4- ஒமைக்ரான் தொற்று பரவலை கண்டறியும் டாடா நிறுவனத்தின் ‘ஒமிசுயர்’ கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர் )அனுமதி வழங்கி உள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான தொற்று  பரவலை கண்டுபிடிக்கும் முதல் கருவியாக ஒமிசுயர் இடம்பெற்றுள்ளது.  ஒமைக்ரான் மாறுபாட்டைக் கண்டறிய அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் கருவி நிறுவனமான தெர்மோ ஃபிஷரால் உருவாக்கப்பட்டுள்ள கருவி பயன் படுத்தப்பட்டு வருகிறது.   இந்த நிலையில், தற்போது  டாடா நிறுவன  தயாரிப்பான ஒமிசுயர் எனப்படும் ஆர்.டி.பிசிஆர் கருவிக்கு ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  அனு மதி வழங்கியுள்ளது. இதற்கான ஒப்புதல் கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி யன்று கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த கருவி மூலம் 2 மணி நேரத்தில் ஒமிக்ரான தொற்று கண்டறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.