states

img

மோடியை வீழ்த்த காத்திருக்கும் மக்கள்

370 சட்டப்பிரிவு ரத்தால் ஜம்மு-காஷ்மீர் மக்களும், அரவிந்த் கெஜ்ரிவால் கைது மற்றும் மோடி அரசின் அடக்குமுறையால் தில்லி மக்களும், ஹேமந்த் சோரன் கைது நடவடிக்கையால் ஜார்க்கண்ட் மக்களும், மதுபான கொள்கை வழக்கில் போலி குற்றச்சாட்டுகளை முன் வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியை பிடித்த பாஜக மீது சத்தீஸ்கர் மக்களும், ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற பாஜக மீது இமாச்சலப்பிரதேச மக்களும், வகுப்புவாத வன்முறை மூலம் மாநிலத்தில் இயல்புநிலையை அகற்றிய பாஜக அரசு மீது ஹரியானா மற்றும் உத்தரகண்ட் மக்களும் பாஜக மீது பயங்கர கோபத்திலுள்ள நிலையில், வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தங்களது பொன்னான வாக்குகள் மூலம் மோடியை குஜராத்திற்கு துரத்த வடமாநில மக்கள் தயராக உள்ளனர்.