states

img

2024-இல் பாஜக ஆட்சியை வீழ்த்துவோம்!

லாலு பிரசாத் அழைப்பு மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்!

முன்னதாக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின்  தலைவர் சோனியா காந்தியை அவரது தில்லி ஜன்பத் இல்லத்தில் நிதிஷ்  குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் சந்தித்தனர். 

பின்னர், இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்  குமார், “சோனியா காந்தியுடன் நாங்கள் இருவரும் நன்கு உரையாடி னோம். நாட்டின் வளர்ச்சிக்காக நாங்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய தேவை உள்ளது. காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான  தேர்தல் நடைபெறவுள்ளதால் அதன் பின்னர் சோனியா காந்தி சந்திப்பு  குறித்து பேசுவார்” என்றார்.

பின்னர் லாலு பிரசாத் பேசுகையில், “எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒரு அணியில் திரண்டு 2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும். பீகார் போல அனைத்து மாநிலங்களி லும் பாஜகவுக்கு எதிராக கட்சிகள் அணி திரள வேண்டும். பாஜகவை  பார்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றும் பயப்படவில்லை” என்றார்.

புதுதில்லி, செப்.26- 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே தங்களின் ஒரே இலக்கு என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் சூளுரைத்துள்ளனர். பாஜக கூட்டணியிலிருந்து வெளி யேறியதை அடுத்து, தேசிய அளவில்  எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இறங்கினார். இதற்காக செப்  டம்பர் முதல் வாரத்தில் தில்லியில் முகாமிட்டு தேவகவுடா, ராகுல் காந்தி, சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா, சரத் பவார், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர் களை சந்தித்தார். இதனொரு பகுதி யாக, இந்திய தேசிய லோக் தளம்  (ஐஎன்எல்டி) தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலாவையும் அவர் சந்தித்து உரையாடினார். அப்போது, செப்டம்பர் 25-ஆம் தேதி, இந்திய தேசிய லோக் தளம் நிறு வனர் தேவிலாலின் பிறந்த நாளை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் ஒரே மேடையில் கூடும் வகையில் பொதுக்  கூட்டம் நடத்துவதென தீர்மானிக்கப் பட்டது.

அதனடிப்படையில், முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் 109-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஹரியானாவின் பதேபாத்தில் ஞாயி றன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய தேசிய லோக் தள  தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார், பீகார் துணை முதல்வ ரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவ ருமான தேஜஸ்வி, அகாலி தளம் தலை வர் சுக்பீர் சிங் பாதல், சிவசேனா எம்.பி.  அரவிந்த் சாவந்த் உள்ளிட்ட நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் அணி வகுத்தனர். அப்போது, 2024 தேர்தலில் பாஜக-வை வீழ்த்துவதே தங்களின் லட்சியம் என்று அவர்கள் குறிப்பிட் டனர்.

நிதிஷ்குமார்

நிதிஷ் குமார் பேசுகையில், “தங்க ளது அரசியல் ஆதாயங்களுக்காக, சமூகத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்  லிம்கள் இடையே கலகத்தை விளை விக்க பாஜக முயற்சிக்கிறது. உண்மை யிலேயே சமூகத்தில் இந்து-முஸ்லிம்  பிரச்சனை கிடையாது. 1947 பிரிவினை யின்போது பெரும்பாலான முஸ்லிம் கள் இந்தியாவில் இருக்கவே முடிவு  செய்தனர். ஆனால், சில தீங்கிழைக் கும் நபர்கள் சமூகத்தில் பிளவை ஏற்  படுத்துகின்றனர். பாஜக-வை எதிர்  கொள்ள காங்கிரஸ், இடதுசாரிகள்  உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டியது காலத் தின் கட்டாயம். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக மோசமாக தோல்வி யுறுவதை இந்த பிரதான எதிர்க்கட்சி  கூட்டணியால் உறுதி செய்ய முடி யும். மூன்றாவது அணி என்ற கேள் விக்கே இடமில்லை. காங்கிரஸ், இடதுசாரிகள் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி சாத்தியமில்லை. எனவே, எதிர்க்கட்சிகளிடையே பெரும் ஒற்று மையை ஏற்படுத்த தலைவர்கள் பணி யாற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். “2024 மக்களவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை உறுதி செய்ய நாம்  அனைவரும் (அனைத்து எதிர்க்கட்சி களும்) ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய காலகட்டம் வந்துள்ளது. விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் தற்கொலையால் எந்த தீர்வும் கிடைத்துவிடாது. மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால்தான் அவர்களது பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வு கிடைக்கும்” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குறிப்பிட்டுள்ளார்.

சீத்தாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தாராம்  யெச்சூரி பேசுகையில், “இந்தியாவை யும் அதன் கலாச்சாரத்தையும் அழிக்க முயலும் பாஜகவை மக்களவைத் தேர்தலில் தோற்கடிப்போம். மக்  கள் சகோதரத்துவத்துடன் இருக்கக்  கூடாது; ஒவ்வொருவரும் வெறுப்பு டன் இருக்க வேண்டும்; இது தான்  தமக்கு லாபம் என பாஜக நினைக்கி றது. இந்த ஆபத்தான கொள்கையா ளர்களை மக்கள் தோற்கடிப்பார்கள். நாட்டில் பணக்காரர்கள் மேலும்  பணக்காரர்களாகிறார்கள். நாட்  டின் சொத்துக்கள் சூறையாடப்படு கின்றன. ஒட்டுமொத்த பொதுத்துறை களின் மேலாளர் மோடி தான் என்  பதை அவருக்கு நாம் தெரியப்படுத்து வோம். அதேநேரத்தில் பொதுச் சொத்துக்களை விற்க முய லும் பிரதமர் மோடி அவர்களே, பொதுத்துறைகளை பாதுகாக்கத் தவறும் நீங்கள் தேர்தலின் மூலம்  தூக்கியெறியப்படுவீர்கள். நம் நாட் டைக் காப்பாற்ற வேண்டுமானால், பாஜகவை ஆட்சியில் இருந்து தூக்கி யெறிய வேண்டும். இது ‘மன் கி பாத்  அல்ல. இது தில் கி பாத்” என்றார்.

தேஜஸ்வி

பீகார் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலை வருமான தேஜஸ்வி பேசுகையில், “வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்  படும் என்ற வாக்குறுதியை, தேசிய  ஜனநாயக கூட்டணி அரசு நிறை வேற்றவில்லை. அரசியலமைப்பை யும், ஜனநாயகத்தையும் காக்கவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் வெளியேறி உள்ளன. அடுத்த மக்களவைத் தேர்தலில் ஒரே அணியில் போட்டியிட்டு, பாஜக வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒத்து ழைக்க வேண்டும்” என்று வேண்டு கோள் விடுத்தார்.

சுக்பீர் சிங் பாதல்

அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் பேசுகையில், ‘’பாஜக மிகச்  சிறிய கட்சியாக இருந்தபோது அகாலி தளம், சிவசேனா, ஐக்கிய ஜனதா  தளம் இணைந்துதான் தேசிய ஜன நாயக கூட்டணியை உருவாக்கின. அந்த கட்சிகள் அனைத்தும் தற்போது இந்த மேடையில் உள்ளன. எனவே, நாங்கள்தான் உண்மையான தேசிய ஜனநாயக கூட்டணி,’’ என்றார். ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து, புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான நேரம் வந்திருக்கிறது என்றும் கூறினார். 

;