உணர்வுப்பூர்வமான பல நிகழ்வுகளுக்கு பழைய நாடாளுமன்றக் கட்டிடம் சாட்சியாக உள்ளது. நாடாளுமன்றம் மீதான தாக்குதலை நாடு ஒரு போதும் மறவாது. இந்தக் கூட்டத் தொடர் மிக குறுகியது. ஆனால் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
- பிரதமர் நரேந்திர மோடி -
புதுதில்லி, செப். 18- நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர், அறிவிக்கப்பட்டபடி திங்க ளன்று துவங்கியது. செப்டம்பர் 18 முதல் 22 வரை 5 அமர்வுகள் மட்டுமே நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் 8 மசோதாக்களைக் கொண்டுவர உள்ள தாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப் பட்டு உள்ளது. ஆனால், பொது சிவில் சட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தல், நாட்டின் பெயரை பாரத் என மாற்றுதல், புதிய தண்டனைச் சட்டம், சட்டமன்ற - நாடாளுமன்றங் களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குதல் ஆகியவை தொடர்பாகவும், கடைசிநேரத்தில் மோடி அரசு மசோதாக்களை கொண்டு வரலாம் என்று பாஜக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். ஜனவரி மாத இறுதியில் தொடங்கி மார்ச் மாதம் வரை பட்ஜெட் கூட்டத்தொடரும், மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலும், குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் நடைபெறும். ஆனால், இந்த முறை வழக்கத் திற்கு மாறாக செப்டம்பர் 18 அன்று துவங்கி 5 நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறு கிறது. இக்கூட்டத்தொடரின் முதல் நாளில் ‘வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா, ‘பத்திரிகைகள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா ஆகியவை, கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதியே மாநிலங்கள வையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக் கள் ஆகும். ‘அஞ்சல் அலுவலக மசோதா மாநிலங்களவையில் அறி முகம் செய்யப்பட்டு உள்ளன.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை யன்று (செப்டம்பர் 17), நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்ற போது, பட்டியல் சாதியினர் /பட்டியல் பழங்குடியினர் (எஸ்சி/எஸ்டி) ஒழுங்கு தொடர்பான மூன்று மசோதாக்கள், மூத்த குடிமக்கள் நல மசோதா- 2023 ஆகியவையும் நிகழ்ச்சிநிரலில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப் பட்டது. மூத்த குடிமக்கள் நல மசோதா ஏற்கெனவே மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சிறப்புக் கூட்டத்தொட ரில் கேள்வி நேரமே இருக்காது என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. புதிய கட்டடத்திற்கு நாடாளுமன்ற த்தை மாற்றுவதைக் குறிக்கும் வகை யில் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு புதிய சீருடைகளை வடிவமைக்கப் பட்டுள்ளன. அதில் குறிப்பிட்ட துறை யினருக்கான சீருடைகள், பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை பொறிக்கப் பட்டுள்ளது. தற்போதுள்ள கட்டடத்தின் மைய மண்டபத்தில் ஒரு விழாவிற்குப் பிறகு, சிறப்புக் கூட்டத் தொடர், புதிய கட்டடத் திற்கு மாறும் என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.