states

img

பாஜக சார்பில் போட்டியிடும் 58 பேரில் 55 பேர் கோடீஸ்வரர்கள்!

லக்னோ, பிப்.5- உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர் தலில், அதிகபட்சமாக 55 கோடீஸ்வர வேட்பாளர்களை பாஜக களமிறக்கியுள்ளது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக ஷாம்லி, மீரட், முசாபர் நகர், பாக்பத், ஹாபூர், கவுதம் புத்த நகர், காஜியாபாத், புலந்த்சாஹர், மதுரா, ஆக்ரா மற்றும் அலிகார் ஆகிய 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட 58 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10 அன்று வாக்குப் பதிவு நடைபெறு கிறது. இந்த 58 தொகுதிகளில் மொத்தம் 615 பேர் வேட்பாளர்களாக கறமிறங்கி யுள்ளனர்.  இந்நிலையில், முதற்கட்டத் தேர்த லில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பை ‘ஜனநாயக சீர் திருத்தங்களுக்கான சங்கம்’ (Association For Democratic Reforms-  ADR) பகுப்பாய்வு செய்து வெளியிட்டுள்ளது.

இதன்படி, உ.பி. முதற்கட்ட தேர்த லில் போட்டியிடும் 615 வேட்பாளர்களில் 280 பேர் (46 சதவிகிதம்) தாங்கள் கோடீஸ் வரர்கள் என வேட்பு மனுவில் தெரிவித் துள்ளனர்.  இவர்களில் அதிகபட்சமாக பாஜக வில் 55 வேட்பாளர்கள் கோடீஸ்வரர் களாக உள்ளனர். பாஜகவுக்கு அடுத்த படியாக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடுவோரில் 50 பேரும், காங்கி ரஸ் சார்பில் போட்டியிடுவோரில் 32 பேரும், ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சி சார்பில் போட்டியிடுவோரில் 28 பேரும், சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடு வோரில் 23 பேரும், ஆம் ஆத்மி வேட்பா ளர்கள் 22 பேரும் தங்களுக்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்ப தாக தெரிவித்துள்ளனர். சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு தலா ரூ. 13.23 கோடியாகவும், பாஜக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு தலா ரூ. 12.01 கோடியாகவும் உள்ளது.