ஹரியானாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம் என வாக்குறுதி கொடுக்க விரும்புகிறேன் என அமித்ஷா வெறுப்புப் பேச்சு பேசியுள்ளார். அம்மாநிலத்தில் ‘பிற்படுத்தப்பட்டோர் சம்மான் சம்மேளனத் தில்’ உரையாற்றிய அமித்ஷா ஓபிசி இடஒதுக் கீடு தொடர்பாக காகா கலேல்கர் கமிஷன் அளித்த பரிந்துரைகளை காங்கிரஸ் பல ஆண்டுகளாக அமல்படுத்தவில்லை என்றும் ஓபிசி இடஒதுக்கீட்டை காங்கி ரஸ் முஸ்லிம்களுக்கு கொடுக்கிறது எனவும் மதவெறியை கிளப்பியுள்ளார்.