ரயில்வேயில் மோசமான உணவு குறித்த 19,427 புகார்களில் நடவடிக்கை இல்லை
சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்வியில் அம்பலம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லங்களவை உறுப்பி னர் ஜான் பிரிட்டாஸ் கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வேயில் வழங் கப்பட்ட உணவு மற்றும் புகார் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார். அதில்,”ரயில்வேயில் மோசமான உணவு வழங்குவதாக பயணிகள் வழங்கப்படும் புகார் கணிசமாக அதிகரித்து வருகிறது. 2020-21ஆம் ஆண்டில் 253 புகார்கள் மட்டுமே பெறப்பட்டது. 2021-22 ஆம் ஆண்டில் 1,082 ஆக அதிக ரித்துள்ளது. 2022-23இல் 4,421 ஆக வும், 2023-24இல் 7,026 ஆகவும், 2024-25 இல் 6645 ஆகவும் அதி கரித்துள்ளது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் மோசமான உணவு வழங்குவதாக ரயில்வேக்கு மொத் தம் 19,427 புகார்கள் வந்துள்ளது. 3 ஆயிரம் புகார்களில் மட்டுமே நடவடிக்கை பயணிகள் அளித்த 3,137 புகார்களில் அபராதம் விதிக்கப் பட்டது ; 9,627 புகார்களில் எச்ச ரிக்கைகள் மட்டுமே வழங்கப் பட்டன ; 4,467 புகார்களில் கடுமை யான அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டன ; 2,195 புகார்கள் ஆதார மின்றி எழுத்துப்பூர்வமாக தள்ளு படி செய்யப்பட்டன” என அதில் கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர் பதில் அளிக்க மறுப்பு மேலும், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தால் (IRCTC) “வந்தே பாரத்” மற்றும் பிற நீண்ட தூர சேவைகளில் கேட்டரிங் ஒப்பந்தங் களை வழங்குவது தொடர்பான கேள்விகளை ஜான் பிரிட்டாஸ் எம்.பி., மாநிலங்களவையில் எழுப்பினார். கார்ப்பரேட்டுகள் கேட்டரிங் ஒப்பந்தங்களை வெல்வ தாக வலுவான குற்றச்சாட்டுகள் எழுந்த நேரத்தில், ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெளிவான பதிலைக் கொடுக்காமல் கேள்வியைத் தவிர்த்துவிட்டார். இதுதொடர்பாக ஜான் பிரிட்டாஸ் தனது முகநூல் பதிவில், ”கடந்த 5 ஆண்டுகளில் கேட்டரிங் தொடர்பாக ஒரே ஒரு புகாரில் உரி மம் ரத்து செய்யப்பட்டது என்பது அஸ்வினி வைஷ்ணவின் பதிலில் இருந்து தெளிவாகிறது. தற்போது 20 நிறுவனங்களுடன் ஒப்பந்தங் கள் இருப்பதாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் ஒப்புக்கொண்டாலும், அவை என்ன வகையான நிறுவ னங்கள் அல்லது அவை ஏதேனும் நிறுவனங்களின் துணை நிறு வனங்களா என்பதை அவர் வெளி யிடவில்லை. மாறாக, பொதுவான டெண்டர் நடைமுறைகள் குறித்து மட்டுமே விளக்கம் அளித்துள் ளார். இதிலிருந்து ரயில்வே பயணிகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்கிறது உறுதியாகியுள்ளது. மீண்டும் மீண்டும் மீறல்கள் குறித்து புகார்கள் எழுந்தபோதும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பதும் தெளிவா கிறது. குறிப்பாக இது அர சாங்கத்தின் உறுதிப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது. தர மான சேவையை எதிர்பார்க்கும் பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது” என அவர் குற்றம் சாட்டினார்.
ரயில்வேயில் காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
வி.சிவதாசன் எம்.பி. கேள்விக்கு நேரடி பதிலில்லை
ரயில்வேயில் 5 ஆண்டுகளின் மொத்த காலிப் பணியிடங்கள் மற்றும் புதிய பணியிடங்கள் குறித்து மாநிலங்களவையில் சிபிஎம் எம்.பி., வி.சிவதாசன் எழுப் பிய கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத ஒன்றிய அரசு அறி விக்கப்பட்ட தேர்வில் விண்ணப் பித்தவர்களின் எண்ணிக்கையை தெரிவித்துள்ளது. தனது கேள்விக்கு நேரடியக பதிலளிக்காமல் ஒன்றிய அரசு தவிர்த்து வருகிறது என்று வி. சிவதாசன் எம்.பி., குற்றம்சாட்டி யுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”கடந்த 5 ஆண்டுகளுக்கான ரயில்வே ஆட்செர்ப்பு நியமனங்களின் ஆண்டு வாரியான எண்ணிக்கை யையும் வெளியிட ரயில்வே தயா ராக இல்லை. இது இந்தியாவில் நிலவும் கடுமையான வேலை வாய்ப்பு நெருக்கடியை அம்பலப் படுத்துகிறது. சுமார் 50,000 காலி யிடங்களுக்கு 1.83 கோடி விண் ணப்பதாரர்கள் உள்ளனர். தொழில்நுட்பம் அல்லாத பட்ட தாரி நிலையில், 8,113 காலியிடங்க ளுக்கு 58.41 லட்சம் பேர் விண் ணப்பித்தனர். ஆர்பிஎப் கான்ஸ்டபிள் பதவிக்கு 4,208 காலி யிடங்கள் உள்ளன ; ஆனால் 45.3 லட்சம் விண்ணப்பதாரர்கள் உள்ளனர். ஆர்பிஎப் சப் இன்ஸ் பெக்டர் பதவிக்கு 452 காலி யிடங்கள் மட்டுமே உள்ளன; ஆனால் 15.35 லட்சம் விண்ணப்ப தாரர்கள் உள்ளனர். டெக்னீசியன் பதவியில் 14,298 காலியிடங்களுக்கு 26.99 லட்சம் விண்ணப்பங்கள் பெறப் பட்டன. 18,799 உதவி லோகோ பைலட் (ALP) காலியிடங்களுக்கு 18.4 லட்சம் பேர் விண்ணப்பித்த னர். ஜூனியர் இன்ஜினியர் (ஜே.இ)/டிப்போ மெட்டீரியல் சூப் பிரண்டு (டிஎம்எஸ்)/கெமிக்கல் & மெட்டலர்ஜிகல் அசிஸ்டென்ட் (சிஎம்ஏ) பதவிக்கு 7,951 காலி யிடங்கள் உள்ளன ; ஆனால் 11.01 லட்சம் விண்ணப்பதாரர்கள் உள்ளனர். துணை மருத்துவப் பிரிவில் 1,376 காலியிடங்களுக்கு 7.08 லட்சம் விண்ணப்பதாரர்கள் உள்ளனர். ரயில்வே பெரிய அளவில் பத விகளைக் குறைத்து, ஆட்சேர்ப்பு செயல்முறையையே தாமதப் படுத்துகிறது. லோகோ பைலட்கள், பாதுகாப்புப் பணி யாளர்கள் போன்ற காலி யிடங்களை நிரப்பாதது பயணி களின் உயிருக்கு அச்சுறுத்தலா கும். ஆனால், இந்தக் குறைபாடு களை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவற்றைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசு முறி யடிக்க முயற்சிக்கிறது. காலி யிடங்களைக் கேட்டால் வெளி யிடாத பாஜக அரசின் அணுகு முறை கண்மூடித்தனமானது. இது முற்றிலும் ஜனநாயக விரோ தமானது” என குற்றம்சாட்டினார்.