states

img

நாங்கள் எங்கே தோற்றோம்; அவர்கள் ஜெயித்து விட்டார்கள்...

புதுதில்லி, அக்.17- அமெரிக்கா டாலருக்கு இணை யான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்து வருகிறது. தற் போது ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 82 ரூபாய் 42 காசு களாக  உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பின், இந்த  வரலாறு காணாத வீழ்ச்சிக்கு உக் ரைன் - ரஷ்யா இடையிலான யுத்தம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, கொரோனா கால இடர்பாடுகள், பங்குச் சந்தையில் இருந்து அதிக ளவில் வெளியேறிய அந்நிய முதலீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள்  கூறப்படுகின்றன. இதனடிப்படை யில், தரமதிப்பீட்டு நிறுவனங்கள், இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை வெகுவாக குறைத்துள்ளன.  எனினும், இந்தியப் பொருளாதா ரம் வலுவாகவே உள்ளது என்று பிர தமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கூறி வரு கின்றனர். உலக வங்கி மற்றும் சர்வ தேச நாணய நிதியத்தின் மாநாட்டிற் காக அமெரிக்கா சென்றுள்ள ஒன்  றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா  சீதாராமன், அங்கும் இதையே கூறி னார். அப்போது, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக, நான் பார்க்க வில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு தான் தொடர்ந்து உயர்ந்து வரு கிறது” என்றும் புதிய விளக்கம் அளித்தார்.

அவரது இந்த விளக்கம் சர்வ தேச அளவில் தற்போது பெரும் காமெடியாக மாறியுள்ளது. நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமனின் பொரு ளாதார அறிவு தங்களை வியக்க  வைப்பதாக, பாஜக மூத்த தலை வர் சுப்பிரமணியசாமி துவங்கி, காங்  கிரஸ் கட்சியின் கீர்த்தி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கிளைடு கிராஸ்டோ, நடிகர் பிர காஷ் ராஜ் என பலரும் கிண்டல் செய்துள்ளனர். சுப்பிரமணியசாமி, டுவிட்டர் பக்  கத்தில் நிர்மலா சீதாராமனின் போட்டோவுடன் உள்ள மீம்ஸை பகிர்ந்துள்ளார். அதில், “நாம் தோற்கவில்லை.. எதிரணி ஜெயித்து விட்டது’’ என உல்டா செய்துள்ளார். இதேபோல “நான் எங்கே சாப்  பிட்டேன்; அவர்கள் ஊட்டி விட்டார்  கள்” என்று நடிகர் பிரகாஷ் ராஜூம்,  “எனக்குத் தெரியும். மேடைக் காமெடி செய்வதில் நிர்மலா சீதா ராமன் சிறந்தவர்” என்று காங்கிரஸ் கட்சியின் கீர்த்தி ஆசாத்தும் கிண் டல் செய்துள்ளனர்.  “ரூபாயின் மதிப்பு சரியவில்லை.  டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது என்ற நிர்மலா சீதாராமனின் பேச்சு அபத்தமானது. இந்திய பொருளா தாரத்தை காப்பது, நிதியமைச்சராக நிர்மலா சீதாராமனின் கடமை. மாறாக, கேலிக்கு வழி வகுக்கும் இதுபோன்ற அறிக்கைகளை நிர்மலா சீதாராமன் தவிர்க்க வேண்  டும்” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கிளைடு கிராஸ்டோ கண்  டித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும்,  ஒன்றிய முன்னாள் நிதியமைச்சரு மான ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘இந்திய ரூபாய் மதிப்பு சரியவில்லை, அமெரிக்க டாலர் மதிப்புதான் உயர்கிறது’ என  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் கூறியது முற்றிலும் உண்மை.  ஏனென்றால் தேர்தலில் தோல்வி யடைந்த வேட்பாளரோ / கட்சியோ,  ’நாங்கள் தேர்தலில் தோற்க வில்லை. அவர்கள் வெற்றி பெற்று  விட்டார்கள்’ என்று தானே எப்போ துமே கூறுவார்கள்” என்று மறைமுக மாக கிண்டலடித்துள்ளார்.