states

img

75 ஆயிரம் பேருக்கு அரசு வேலை குஜராத் தேர்தலுக்காக மோடியின் புது உத்தி

புதுதில்லி, அக்.22- இமாச்சலப்பிரதேச தேர்தல் அறிவிக்கப்  பட்ட நிலையில் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை மட்டும் தேர்தல்  ஆணையம் அறிவிக்கவில்லை. தேர்தல்  வெற்றிக்காக குஜராத்தில் கடந்த அக்.19-ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் 27-ன்கீழ், குஜராத்தின் ராஜ்கோட்-கோண்  டல்-ஜெட்பூர் பகுதியில் தற்போதுள்ள நான்கு வழிச்சாலையை ஆறுவழிச்சாலை யாக மாற்றும் திட்டத்துக்கும் பிரதமர் அடிக்  கல் நாட்டினார்.  மோர்பி, ராஜ்கோட், பொடாட் ஜாம் நகர்  மற்றும் கட்ச் ஆகிய பகுதிகளில் சுமார் 2950 கோடி ரூபாய் மதிப்பிலான குஜராத் தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் கட்டப்படும் தொழிற்பேட்டைகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது. இருப்பினும்  குஜராத்தில் பாஜக-வின் தோல்வி உறுதி என தகவல்கள் வெளி யான நிலையில் பிரதமர் மோடி “வேலை நிய மன கடிதம்” வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் அரங்கேற்றியது. குஜராத்தில் தனது இமேஜை தக்க வைப் பதற்காக  10 லட்சம் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு மேளாவை  தொடங்கி வைத்தார். பிரதமர். தொடர்ந்து 75 ஆயிரம்  பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கப்  பட்டன.

வேலைவாய்ப்பு பெற்றவர்களிடையே உரையாற்றிய பிரதமர்,  “சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கருத்தில்  கொண்டு, ஒன்றிய அரசு 75,000 இளைஞர்  களுக்கு இத்திட்டத்தின் கீழ் பணி நிய மனக் கடிதங்களை வழங்கி வருகிறது.  வளர்ந்த இந்தியாவின் உறுதியை நிறை வேற்றுவதற்காக,  தற்சார்பு இந்தியா என்ற  பாதையில் முன்னேறி வருகிறோம். இந்தி யாவை தன்னம்பிக்கை பாதைக்குக் கொண்டு செல்வதில் புதுமையாளர்கள், தொழில் முனைவோர், தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் உற்பத்தி மற்றும் சேவைத் துறையைச் சேர்ந்தவர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். 75 ஆயிரம் பணி நியமனக் கடிதங்களை வழங்குவது, கடந்த 7-8 ஆண்டுகளில் அரசு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டு கிறது. இன்று, வேலை கலாச்சாரம் மாறி வரு கிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 7-8 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் பத்தாவது இடத்தில் இருந்த   இந்தியா தற்போது ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. இதற்கு கடந்த எட்டு  ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளே காரணம்”.   நாட்டிலேயே முதன்முறையாக காதி  மற்றும் கிராமத் தொழில்களின் மதிப்பு  ரூ.4 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. காதி மற்றும் கிராமத் தொழில்களில்  நான்கு கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் சென்னையில் ஒன்றிய நிதியமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  பல்வேறு துறைகளில் அரசு ஊழியர்களை வேலை வாய்ப்பு மேளாவை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு  மாநிலங்களைச் சேர்ந்த 255 பேர் சென்னை யில் சனிக்கிழமை பணி நியமன ஆணை யைப் பெற்றனர். 25 பேருக்கு அமைச்சர் நேரில் பணி நியமன ஆணைகளை வழங்கி னார்.

;