states

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் வெளிநடப்பு

புதுதில்லி, டிச.2- வியாழனன்று காலை மாநிலங்க ளவை கூடியவுடன் எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் 12 பேரின் இடைநீக்கத்தை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க் கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவையை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார். கடந்த மூன்று நாட்களாக, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததால், அவை யில் எந்த பலனளிக்கக்கூடிய விவாத மும் நடைபெறவில்லை: இது ஜன நாயகத்திற்கு விரோதமானது என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்க ய்யா நாயுடு குறை கூறினார். இந்நிலையில், பணவீக்கம் குறித்து மாநிலங்களவையில் விவா திக்க வேண்டுமென காங்கிரஸ் எதிர்க் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசத் தொடங்கினார். அப்போது, பணவீக்கம் என்பது நம் அனைவருக்கும் உள்ள பிரச்சனை, இது குறித்து விவாதம் நடத்த அரசு  அனுமதி அளிக்க வேண்டும் என்றார். அவை துணைத் தலைவர் ஹரி வன்ஷ், கார்கேயின் கோரிக்கையை நிராகரித்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.

;