புதுதில்லி, டிச.19- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே வெளியிட்டுள்ள அறிக்கை : கர்நாடக சட்டமன்றத்தில் பெண்களுக்கு எதிராக ஆட்சேபகரமாக பேசிய முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமாரின் பேச்சுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இவர் கூறிய கூற்றுக்களை சட்டமன்றத்தில் எவரும் ஆட்சேபிக்காததும் இதற்கு இணையான விதத்தில் வருத்தத்தை அளிக்கிறது. இவர் கூறிய வார்த்தைகளைக் கண்டிக்கவோ, அதனைத் தடுத்து நிறுத்தவோ சபாநாயகர் எவ்வித முயற்சியும் எடுக்காததும் மிகவும் அருவருப்பாக இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் நாளும் அதிகரித்துக் கொண்டிருக் கின்றன. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராகக் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டி ருப்பதை தேசியக் குற்றப் புலனாய்வு பதிவு மையத்தின் தரவுகள் தெளிவாகக்காட்டு கின்றன.
இந்நிலையில் மக்கள் பிரதிநிதி ஒருவர் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் நடப்பதைக் கிண்டல் செய்திருப்பது சங்கடத்தை ஏற்படுத்துகிறது. பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாவது தொடர்பாக மிகவும் கூருணர்ச்சியற்ற முறையில் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் குமார் இருந்து வருவதையே இது பிரதி பலிக்கிறது. இவ்வாறு பாதிப்புக்கு உள்ளா கும் பெண்கள் நீண்ட காலத்திற்கு அதன் பாதிப்புகளிலிருந்து வெளிவரமுடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
வன்முறைக்கு ஆளான பெண்களுக்காகப் போராடும்போது, காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் பல்வேறு மட்டங்களிலும் கூருணர்வற்ற அணுகுமுறையையும், ஆணா திக்க மனப்பான்மையையும் மாதர் அமைப்புகள் எதிர்கொள்வது தொடர்கின்றன. அரசாங்கத்தின் தரப்பில் பெண்களுக் காக ஏராளமானப் பிரகடனங்கள் உரத்துச் சொல்லப்பட்டாலும், உருப்படியாக எதுவும் நடைபெறுவதில்லை. பெண்களின் மறு வாழ்வுக்காக ஏற்படுத்தப்பட்ட நிர்பயா நிதி யத்தின் பணம் போதுமானதல்ல என்பது மட்டுமல்ல, அவ்வாறு ஒதுக்கீடு செய்யப் பட்ட பணமும் வேறு திட்டங்களுக்குச் செலவு செய்திடத் திருப்பிவிடப்படுகிறது. அரசமைப்புச்சட்டத்தின் கீழ் அனை வருக்கும் நீதி கிடைத்திட பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையிலிருந்து தவ றும்போது நடவடிக்கை எடுக்க வேண்டும்.