states

img

அயோத்தியில் தலித் மக்களின் நிலங்கள் அபகரிப்பு

அயோத்தி, டிச.22- உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மகேஷ் என்ற சாமி யாரால் நிறுவப்பட்டது, மகரிஷி ராமா யண வித்யாபீட அறக்கட்டளை (MRVT). இந்த அறக்கட்டளை தலித் மக்களுக்கு சொந்தமான நிலங்களை சட்டவிரோதமாக அபகரித்து, ரியல் எஸ்டேட் தொழில் மூலம் அவற்றை பல கோடி ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்திருப்பது ‘இந்தியன் எக்ஸ் பிரஸ்’ நாளிதழின் புலனாய்வு மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் இடத்திலிருந்து 5 கி.மீ. சுற்றளவிற்குள் இருக்கும் பர்ஹாதா மஞ்சா உள்ளிட்ட கிரா மங்களில் தலித் மக்கள் வசித்து வரு கின்றனர்.

இந்த கிராமங்களில்தான் 1990-களின் முற்பகுதியில் சுமார் 52 ஆயிரம் சதுர மீட்டர் நிலங்களை தலித் மக்களிடமிருந்து மகரிஷி ராமாயண வித்யாபீத் அறக்கட்டளை சட்ட விரோதமாக சுருட்டியுள்ளது. உத்தரப்பிரதேச வருவாய் சட்ட விதிகள், தலித் ஒருவருக்கு சொந்த மான விவசாய நிலம், 3.5 பிகாவிற்கும் குறைவாக இருந்தால் அதனை மாவட்ட ஆட்சியர் அனுமதிக்காத பட்சத்தில், தலித் அல்லாத ஒருவ ரால் கையகப்படுத்த முடியாது என்று கூறுகிறது. ஆனால், தனது நிறு வனத்தில் பணியாளராக இருந்த ரோங்காய் என்ற ஏழை தலித் நபரைப் பயன்படுத்தி சுமார் 12 தலித் விவ சாயிகளிடமிருந்து அறக்கட்டளை நிர்வாகம் நிலங்களை கைப்பற்றி யுள்ளது. தன் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலங்களை, ரோங்காய் 1996 ஜூன் மாதம் பதிவு செய்யப்படாத நன் கொடைப் பத்திரத்தில் கையெழுத் திட்டு, மகரிஷி ராமாயண வித்யாபீட அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். தற்போது ரோங் காய் அயோத்தியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் இருக்கும் சவ்பூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ரோங்காய் பெயரில் அயோத்தி யில் வாங்கப்பட்ட நிலம் பற்றியோ, அதனை அவர் அறக்கட்டளைக்கு தானமாக எழுதிக் கொடுத்தது பற் றியோ தங்களுக்கு எதுவும் தெரி யாது என்று ரோங்காயின் மனைவி காப்ரைன், மருமகன் கச்ராஹி ஆகி யோர் கூறியுள்ளனர். இன்னும் சொல் லப் போனால், ரோங்காய் அயோத் திக்குச் சென்றே பல ஆண்டுகள் ஆகி விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ள னர்.

தலித் மக்களின் ஒட்டுமொத்த நிலத்தையும் ரோங்காய் வழியாக மக ரிஷி ராமாயண வித்யாபீத் அறக்கட் டளை தோராயமாக 6.38 லட்ச ரூபாய்க்கு வாங்கியதாக ஆவணங்கள் காட்டு கின்றன. ஆனால், இந்த நிலங்களின் தற்போதைய அரசாங்க மதிப்பே ரூ.3 கோடியே 90 லட்சம் முதல் ரூ. 8 கோடியே 50 லட்சம் என்று கூறப்படு கிறது. நிலத்தைப் பறிகொடுத்த தலித் உரிமையாளர்களில் ஒருவரான மகா தேவ் 2019 ஆம் ஆண்டு, சட்டவிரோத நில அபகரிப்பு தொடர்பாக வருவாய் வாரியத்தில் முதன் முதலாக புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து வருவாய் வாரியத்தின் உத்தரவின் பேரில், வருவாய் வாரிய கூடுதல் ஆணையர் ஷிவ் பூஜன் மற்றும் கூடு தல் மாவட்ட ஆட்சியர் கோரேலால் சுக்லா ஆகியோர் அடங்கிய குழு,  அயோத்தி மண்டல வருவாய் ஆணையர் அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 இந்தக்குழு 2020 பிப்ரவரியில், தனது விசாரணை அறிக்கையை அயோத்தி மண்டல வருவாய் ஆணையர் எம்.பி அகர்வாலிடம் சமர்ப்பித்துள்ளது. இதனடிப்படை யில், “பதிவு செய்யப்படாத நன் கொடைப் பத்திரம் மூலம் (பட்டியல் வகுப்பினரின்) நிலத்தை சட்டவிரோ தமாக மாற்றியதற்காக மகரிஷி ராமாயண வித்யாபீட அறக்கட் டளை மற்றும் அதற்குத் துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் ஜா பரிந்துரைத் துள்ளார். தற்போது, பிரச்சனைக்குரிய நிலத்தை மாநில அரசிடம் ஒப்ப டைக்க வேண்டும் என்று அயோத்தி யில் உள்ள உதவிப் பதிவு அதி காரி (ஏஆர்ஓ) பான் சிங்கால் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள் ளார்.

;