உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகரத்தை (ராமர் கோவில் உள்ள நகரம்) உள்ளடக்கிய பைசாபாத் மக்களவை தொகுதியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த அவதேஷ் பிரசாத்தை களமிறக்கி பாஜக வேட்பாளரை வீழ்த்தியது இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சி. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி சார்பில் நடைபெற்ற மக்களவை தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் பைசாபாத் தொகுதியில் வெற்றி பெற்ற அவதேஷ் பிரசாத்திற்கு சிறப்பு மரியாதையுடன் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் வரவேற்பு அளித்தார்.