states

குஜராத் மாடலுக்கு மாறிவரும் காஷ்மீர்

ஸ்ரீநகர், அக்.15- ஜம்மு -காஷ்மீரின் நிலைமை வேகமாக மோசம டைந்து வருகிறது. ஒன்றிய அரசின் சட்டங்கள் மக்கள்  நிலைமையை மோசமாக்கி வருகிறது. மக்கள் சுதந் திரக் காற்றை அனுபவிக்க முடியவில்லை என  மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் யூசுப்தாரிகாமி குற்றம்சாட்டினார். ஜம்மு -காஷ்மீரின் நிலை குறித்து குப்கார் மக்கள் கூட்டணியின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குப்கார் மக்கள் கூட்டணி செய்தித் தொடர்பாளர் யூசுப்தாரிகாமி, “ காஷ்மீர் மக்கள் அனைத்து வகை களிலும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். சுதந்தி ரக் காற்றை கூட அவர்கள் சுவாசிக்க முடியவில்லை. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ ஒன்றிய அரசு  பறித்துவிட்டது. இதனால் மக்களுக்கான உரிமை,   பத்திரிகை சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவை  பேராபத்தில் சிக்கிக் கொண்டுள்ளது.  காவல் நிலை யங்களிலும் சிறைச்சாலைகளிலும் அப்பாவி மக்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு வெளியேயும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் பார்க்கக் காத்திருக்கிறார்கள். 

குஜராத் மாடலுக்கு மாறிவரும் காஷ்மீர்

ஜம்மு -காஷ்மீர் மக்களும் அரசியல் கட்சிகளும் விழித்தெழிந்து  மக்கள் மீது பாஜக (ஒன்றிய அரசு) நடத்தும் தாக்குதலுக்கு  குரலெழுப்ப வேண்டிய தரு ணம் வந்துவிட்டது. ஜம்மு -காஷ்மீரில் அதிகாரமும் ஜனநாயகமும் அடி மட்டம் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறு வது கேலிக்கூத்தானது.  ஜம்மு-காஷ்மீர் குஜராத் மாடலுக்கு மாறிவருகிறது என்கிறார் பிரதமர் மோடி. அப்படியென்றால் மது, பீர் மற்றும் போதைப்பொருள்  விற்பனைக்கு  சுதந்திரம் அளிக்கப்பட்டது எப்படி. அவை தாராளமாகக் கிடைப்  பது எப்படி என கேள்வியெழுப்பினார் தாரிகாமி.

வெளிமாநில வாக்காளர்கள்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் காஷ்மீரில் வசிக்கும் வெளிமாநில மக்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க எவ்விதத் தடையும் இல்லை. எனவே சிறப்பு முகாம்களை நடத்தி புதிய  வாக்காளர்களை சேர்க்க உள்ளதாக தேர்தல் ஆணை யம் தெரிவித்துள்ளது. தற்போது 76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வெளிமாநில மக்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்ப தால் கூடுதலாக 25 லட்சம் பேர் வாக்காளர் பட்டிய லில் சேர்க்கப்படுவார்கள். வரும் சட்டமன்றத்  தேர்த லில் அவர்கள் வாக்களிப்பார்கள் என தேர்தல் ஆணை யம் கூறியுள்ளது குறித்துப் பேசிய தாரிகாமி, “ உள்ளூர்  மக்கள் வாக்களிப்பை பறிப்பது, மற்றவர்களுக்கு வாக்குரிமை அளிப்பது பாஜக-வின் திட்டங்களுள் ஒன்று. தனது வெற்றிக்காக பாஜக-இந்த நடவடிக் கையை மேற்கொண்டுள்ளது.  பாஜகவின் திட்டத்தை  தோற்கடிப்போம்” என்றார். 

பரூப் அப்துல்லா

குப்கார் மக்கள் கூட்டணித் தலைவர் டாக்டர் பரூக்  அப்துல்லா பேசுகையில், அரசு 50 ஆயிரம் பேருக்கு  வேலைவாய்ப்பு வழங்குவோம் என வாக்கு றுதியளித்தது. அந்த வாக்குறுதி என்னவாயிற்று. வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதி கரித்து வருவதால் நிலைமை மோசமாக உள்ளது.  ஜம்மு பகுதியில்  ஒரு மாவட்ட துணை மருத்துவ மனையில் மருத்துவர் இல்லை என்பதை நான் நேரில்  பார்த்தேன். இது தான் ஜம்மு - காஷ்மீர் நிலை என்றார்.


 

 

;