காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடை பெற்று வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், மாநில கட்சி யான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். ஜார்க்கண்ட்டில் ஆட்சி குழப் பத்தை ஏற்படுத்த பாஜக தீவிரமாக பல் வேறு சித்து விளையாட்டை அரங்கேற்றி வரும் நிலையில், சுரங்கத் துறை ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தொடர்புள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக செப்டம்பர் 18 அன்று ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதி பதிகள் அனிருத்தா போஸ், பேலா எம் திரி வேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்க ளன்று விசாரணைக்கு வந்தது. ஹேமந்த் சோரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறி ஞர் முகுல் ரோஹத்கி ஆஜரானார். இரு தரப்பு வாதங்களை கேட்ட பின் உச்சநீதி மன்ற நீதிபதிகள், “ஜார்க்கண்ட் உயர்நீதி மன்றத்தை ஏன் அணுகவில்லை? இந்த விவகாரம் உயர்நீதிமன்ற அதிகார வரம் பிற்கு உட்பட்டது. அதனால் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும்” என உத்தரவிட்டு மனுவை ஏற்க மறுத்தனர். சம்மன் அனுப்பிய நாளில் உச்சநீதிமன் றம் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் செப்டம்பர் 23 அன்று ஆஜராகுமாறு அம லாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி யுள்ளது.