states

img

வெள்ளத்தில் மிதக்கிறது ஐ.டி. தலைநகரம்

பெங்களூரு, செப். 6 - கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரு வில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்று நாட்களாக, கொட்டி தீர்க்கும் கனமழை காரணமாக, ஒட்டுமொத்த பெங்களூரு நகரமும் வெள்ளத்தில் மிதக்கிறது. வெள்ளம் காரணமாக, போக்குவரத்து பெரும் சிக்கலாக மாறியுள்ளது. பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிக்களை இயக்க முடிய வில்லை. மக்களால் நடந்தும் கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் பல பகுதிகளில் இருக்கும்  ஐ.டி. ஊழியர்கள் ரூ. 50 கட்டணம் கொடுத்து டிராக்டர்களில் அலுவலகம் சென்று வருகின்ற னர். டிராக்டர் செல்ல முடியாத இடங்களில் சிறிய படகுகள் மூலம் மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது. நீரேற்று நிலையங்களை வெள்ளம்  சூழ்ந்துள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப் பட்டுள்ளது.

வெள்ளம் வடியாததால், பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்து சில நாட்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்படும் என்று கூறியுள்ளன. சில தனியார்  அலுவலகங்கள் பலவும், தங்களின் ஊழி யர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய பரிந்துரைத்துள்ளன. ஆனால், பல நிறுவனங்கள் அப்படி எந்த அறிவிப்பையும் செய்யவில்லை. இதனால் பல ஐ.டி. ஊழியர்கள் வேறு வழியின்றி அலு வலகத்திற்கு டிராக்டர்களில் சென்று வருகின்ற னர். கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதில் ஆகஸ்ட் மாதத்தில் மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக மாநிலத்தில் அணைகள், ஏரி, குளங்கள் உள்பட அனைத்து நீர் நிலைகளும் நிரம்பிப் ததும்பின.

கடந்த ஆகஸ்ட் 30 அன்று மட்டும், 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டியது. அன்றைய தினம் ராம நகரில் 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்து நகருக்க வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின. குடியிருப்புகள் நீரில் மூழ்கின. வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆள் உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், பேருந்துகள், கார்கள், லாரிகள் நீரில் மூழ்கின. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. 30-ஆம் தேதியில் இருந்தே பெங்களூரு வின் அவுட்டர் ரிங் ரோடு எனப்படும் வெளிவட்டச் சாலை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த மழை - வெள்ளப்  இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பெங்களூரு மீண்டு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில்தான், ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் மழை கொட்டத் துவங்கியது. இதில், திங்கட்கிழமை இரவு 3 மணி நேரத்தில் மட்டும் பெங்களூரில் 125 மி.மீ. அளவிற்கு பெய்த மழை, மக்களை மீண்டும் வெள்ளத்தில் மிதக்க வைத்தது.

பெங்களூருவின் கிழக்கு மாரத்தஹள்ளி பகுதியில் அதிகாலை 1.15 மணி நேரப்படி 125 மிமீ, மகாதேவபுரா தொட்னேக்கண்டி பகுதியில் 125 மிமீ, வடக்குபண்டிகொடகேஹள்ளி 125.5 மிமீ அளவு மழை பெய்துள்ளது. கிழக்கு எச்.ஏ.எல் விமான நிலையம் பகுதியில்126 மிமீ பதிவாகியுள்ளது. மிக மிக அதிகபட்சமாக தெற்கு சோழநாயக்கனஹள்ளி பகுதியில் 135 மிமீ மழை பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஒயிட் பீல்டை ஒட்டிய நாகசந்திரா,  பெலந்தூர், ஏமலூர், வர்தூர், உள்ளிட்ட பகுதி களில் உள்ள ஏரிகள் நிரம்பி உடைப்பெடுத்து ஓடின. தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள் குளம் போல் மாறின. பெலந்தூர், ஷார்ஜா வாலா, மடிவாலா, எலட்ரிக் சிட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்கள் வெள்ளத்தில் சிக்கின. இந்நிலையில், செவ்வாயன்றும் 3-வது நாளாக மழை வெளுத்து வாங்கியதால், மக்கள் பெரும் துயரத்தை எதிர் கொண்டுள்ளனர். அலுவலகம் சென்ற பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். பெங்களூரில் அதிக போக்குவரத்து சிக்கல் ஏற்படும் முக்கியச் சந்திப்பான சில்க் போர்ட் சந்திப்பிலும் வெள்ளம் ஏற்பட்டது. 

;