states

ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்பு கேமிரா பொருத்தும் பணிகள் தீவிரம்

தூத்துக்குடி , ஜூன் 14 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கழிவுகளை அகற்றுவதற்காக ஆலை வளாகத்தில் கண்காணிப்பு கேமி ராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி அமைதியாக நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய தடியடி, துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. இந்த நிலையில் ஆலையில் பராமரிப்புப் பணி களை மேற்கொள்ள அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.  அதன்பேரில் ஸ்டெர்லைட் ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றவும், ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-ஆவது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது, பசுமையைப் பராமரிப்பது, புதர்களை அகற்றுவ தற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேற்கண்ட பணிகளை மேற்கொள்வதற்காக தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ்குமார் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்தார். இந்த குழுவினர் ஆலையில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். மேலும் கழிவுகள் அகற்றும் பணிகளை முழுமையாக கண்காணிப்பதற்காக ஆலை வளாகத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கவும், அந்த கேமிராக்கள் அனைத்தும் உதவி ஆட்சியர் அலுவல கத்தில் அமைக்கப்படுகிற கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்க வும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதனால் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திலும், வாசலிலும் சுமார் 18 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே போன்று உதவி ஆட்சியர் அலு வலகத்தில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படுகிறது. இந்த  பணிகள் முடிவடைந்த பிறகு ஆலையில் இருந்து கழிவுகள் அகற்றும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.