states

img

நீதிபதிகள் மட்டும் தலைப்பாகை, திலகம் அணியலாமா?

புதுதில்லி, செப்.7- பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு கடந்த 2022 பிப்ரவரியில் தடைவிதிக்கப்பட்டது. இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் தொடுத்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், “ஹிஜாப் இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே கல்வி நிலைய‌ங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்” என‌ 2022 மார்ச் 15-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் 6 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதேபோல வேறு பலரும் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் செப்டம்பர் 5-ஆம் தேதி உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது.  நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதாஷு துலியா அமர்வு வழக்கை விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறி ஞர்கள் ராஜீவ் தவான், சஞ்சய் ஹெக்டே ஆகி யோர் ஆஜராகினர்.

ஒன்றிய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜூம், கர்நாடக அரசுத் தரப்பில் அம்மாநில அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் நவட்கியும் வாதிட்டனர். அப்போது, “உங்களுக்கு (இஸ்லாமிய மாணவியர்க்கு) மத உரிமை இருக்கலாம். அது சார்ந்து நீங்கள் எந்த ஒரு பழக்கத்தை வேண்டு மானாலும் பின்பற்றலாம். ஆனால் நீங்கள் பின்பற்றும் பழக்கங்களை மத உரிமை என்ற  பெயரில் நிர்ணயிக்கப்பட்ட சீருடைப் பழக்கம் உள்ள பள்ளிக்கும் எடுத்துச் செல்வது சரியா?” என்று மாணவிகள் தரப்பு வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். “மாநில அரசு ஹிஜாப் உரிமையை மறுக்க வில்லையே! பள்ளி, கல்லூரிகளுக்கு வரும்போது அங்குள்ள சீருடையை அணிந்து வர வேண்டும் என்று மட்டும் தானே கூறுகிறது”  என்றும் குறிப்பிட்டனர். அதேபோல, “பள்ளிக்கு ஒரு பெண் குழந்தை ஹிஜாப் அணிந்து வருவதால் எப்படி அப்பள்ளியின் ஒழுக்கம் கெட்டுவிடுகிறது என்று விவரியுங்கள்” என்று ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜிடமும் கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கு செவ்வாயன்றும் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், “அரசியல் சாசன சட்டப்பிரிவு 145 (3)ன்  படி இது முக்கியமான விவகாரம். அதனால் இத னை எத்தனை நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கிறது என்பது முக்கியம்” என்றார். மேலும், “இவ்வழக்கில் இந்த நீதிமன்றம் சொல்லப்போகும் தீர்ப்பை இந்த உலகம் முழு வதுமே கேட்கும். இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கி யத்துவம் வாய்ந்தது” எனவும் குறிப்பிட்டார். அப்போது நீதிபதிகள் “சட்டப்பிரிவு 25ன் படி ஹிஜாப் அணிவது அவசிய நடை முறையா என்பதை வேறுவிதமாகவும் அணுக லாம். அது அவசியமானதாகவும் இருக்கலாம். அவசியம் இல்லாததாகவும் இருக்கலாம். நாங்கள் சொல்ல விரும்புவது என்னவென் றால், அரசு கல்வி நிலையங்களில், மத அடை யாளங்களைப் பின்பற்றுவதை வலியுறுத்த முடியுமா? ஏனெனில் நம் அரசியல் சாசன  முன்னுரையிலேயே ‘நமது தேசம் மதச்சார் பற்றது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதே என்பது தான் கேள்வி” என்றனர். அதற்குப் பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், “என்னுடைய கேள்வி எல்லாம் ஒன்றே ஒன்று தான். அதாவது இந்த உடை யை உடுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா? ஏனென்றால் உச்சநீதிமன்றத்திலுள்ள நீதிபதிகளே பகடி (தலைப்பாகை) மற்றும் திலகம் ஆகியவற்றை வைத்துள்ளனர்” என்ற உதாரணங்களை எடுத்துக் காட்டினார். அப்போது, “பகடி என்பது வித்தியாசமான ஒன்று. அது அரசு குடும்பங்கள் நிறைந்த மாநி லங்களில் ஒரு சிலர் அணிந்து இருப்பார்கள்.

அது  மதம் தொடர்பான விஷயம் அல்ல. அதை மதத்துடன் தொடர்புப்படுத்த தேவையில்லை” என்று நீதிபதி குப்தா தெரிவித்தார். “மேலும், நம்முடைய நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு. மதச்சார்பற்ற நாட்டிலுள்ள அரசு நடத்தும் நிறுவனத்திற்கு மதம் சார்ந்த உடையை அணிந்து வர முடியுமா என்பதுதான் கேள்வி? அது விவாதத்திற்கு உரியது” என்றார். இதையடுத்து, “இரண்டு உயர்நீதிமன்ற ங்கள் இது தொடர்பாக இரு வேறு தீர்ப்பை  அளித்துள்ளன. கேரளா மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்றங்கள் இப்படி தீர்ப்பு வழங்கி யுள்ளன. ஒன்று ஹிஜாப் அணிய அனுமதி வழங்குகிறது. மற்றொன்று ஹிஜாப் அணிய அனுமதி வழங்கவில்லை. ஆகவே இதில் எதை நாம் பின்பற்ற வேண்டும்” என்று ராஜீவ் தவான் கேள்வி எழுப்பினார். அவரைத் தொடர்ந்து இந்த வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, “பெண்கள் இந்த சமூகத்தில் மிகவும் பாதிப்பை  சந்தித்து வருபவர்களாக உள்ளனர். அவர்களி லும் பலருக்கு கல்வி கிடைக்கும் சூழல் சரி யாக அமைவதில்லை. இந்த வழக்கில் கூட  6 பேரில் ஒருவர் ஓராண்டு கல்வியை இழந்துள் ளார். அவர் தனியார் கல்லூரியில் சேர்ந்துள் ளார். மற்ற 5 பேருக்கும் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை ”எனக் கூறினார். அப்போது நீதிபதி குப்தா, “ஹிஜாப் அணிய மறுப்பு தெரிவித்தால் பெண்களுக்கு கல்வி  வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற விவ காரத்தை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார். இந்த வழக்கில் புதன்கிழமையன்றும் விசாரணை தொடர்கிறது.