புதுதில்லி, அக். 7 - செப்டம்பர் மாதத்தில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 26.72 பில்லி யன் டாலராக அதிகரித்துள் ளது. ஏற்றுமதிக்கும் இறக்கு மதிக்கும் இடையேயான வித்தியாசமே, வர்த்தக பற்றாக்குறை எனப்படு கிறது. அந்த வகையில், கடந்த 2021 செப்டம்பரில் 56.29 பில்லியன் டாலர் அளவுக்கு இருந்த இறக்குமதி, 2022 செப்டம்பரில் 59.35 பில்லி யன் டாலர்களாக அதிகரித் துள்ளது. இதுவே, ஏற்றுமதி யை எடுத்துக் கொண்டால், 2021 செப்டம்பரில் 33.81 பில்லியன் டாலராக இருந் தது, 2022 செப்டம்பரில் 3.52 சதவிகிதமாக குறைந்து 32.62 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. இதன்காரணமாக, செப்டம்பர் மாதத்தில் இந்தி யாவின் வர்த்தகப் பற்றாக் குறை 26.72 பில்லியன் டாலர்களாக அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.