புதுதில்லி, செப்.27- கடந்த நான்கே மாதங்களில், எல்ஐசி நிறுவனத்தின் சொத்து மதிப் பில், சுமார் ரூ.2 லட்சம் கோடியை மோடி அரசு சூறையாடியுள்ளது. இதன்காரணமாக, நாட்டின் மதிப்பு நிறுவனங்கள் பட்டியலில் 5-ஆவது இடத்தில் இருந்த எல்ஐசி நிறுவனம் தற்போது 14-ஆவது இடத்திற்கு தள் ளப்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட போது, எல்ஐசி நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ. 6 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டு இருந்த நிலை யில், அந்த மதிப்பு தற்போது சுமார் ரூ.4 லட்சம் கோடியாக கீழே போயிருக்கி றது. எல்ஐசி என்ற இந்திய மக்களின் மாபெரும் சொத்தை, நரேந்திர மோடி அரசு கடந்த மே 17-ஆம் தேதி பங்குச் சந்தை எனும் சூதாட்டத்தில் இறக்கி விட்டது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யை தனியார் முதலாளிகளுக்கு பந்தி வைக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக இதனைச் செய்தது.
முதற்கட்டமாக எல்ஐசியின் 3.5 சத விகிதப் பங்குகளை மட்டும் ஆரம்பப் பொதுச்சலுகை (Initial Public Offering - IPO) அடிப்படையில் மோடி அரசு விற்றது. பங்கு ஒன்றின் விலை அதிக பட்சம் 949 ரூபாய் என்ற அடிப்படை யில், மொத்தம் 22 கோடியே 30 லட்சம் பங்குகளை விற்றது. இந்த விற்பனையின் மூலம் மோடி அரசுக்கு கிடைத்தது 20 ஆயிரத்து 557 கோடி ரூபாய் மட்டும்தான். இதுவொரு பெரிய தொகை அல்ல. இதைவிட அதி கமான தொகையை டிவிடெண்ட் உட் பட பல்வேறு பெயர்களில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசுக்கு எல்ஐசி கொடுத்துக் கொண்டிருக்கிறது. எனவே, பிரச்சனை அரசுக்கு நிதித் தேவை என்பதல்ல. மாறாக, இந்தி யாவின் மிகப்பெரிய காப்பீட்டுச் சந்தை யை பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்ப ரேட்டுகளுக்கு திறந்து விட வேண்டும் என்பதும், அதற்கு எல்ஐசி காவு கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் மோடி அரசின் திட்டமாகும்.
அந்த வகையில்தான், எல்ஐசி-யின் 3.5 சதவிகிதப் பங்குகள் மே 17 அன்று சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஆனால், முதல்நாளே எல்ஐசி-யின் முத லீட்டாளர்கள் அதிர்ச்சியைச் சந்தித்த னர். 949 ரூபாய் என்ற விலையைக் காட்டி லும் குறைவாக 867 ரூபாய் 20 காசுகள் என்ற விலைக்கே எல்ஐசி பங்குகள் பட்டியலிடப்பட்டன. முதல்நாளே பங்கு ஒன்றுக்கு 65 ரூபாய் நஷ்டம் ஏற்பட் டது. இதில், எல்ஐசி-க்கு ஏற்பட்ட பாதிப்பு என்றால், பங்குச் சந்தையில் பட்டிய லிடப்பட்ட முதல் நாளில் எல்ஐசி-யின் சந்தை மதிப்பு 42 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு சரிந்தது. எல்ஐசி-யின் 100 சதவிகித பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பி டப்பட்டிருந்த நிலையில், அது கடந்த மே 17 அன்று ஒரேநாளில் ரூ.5 லட்சத்து 57 ஆயிரம் கோடியாக சரிந்தது. எல்ஐசி நிறுவனத்தின் உண்மை யான உட்பொதிக்கப்பட்ட மதிப்பு ரூ.13 லட்சம் கோடிக்கும் அதிகம். மோடி அரசு அதனை ரூ.6 லட்சம் கோடி என்று சரி பாதியாக குறைத்து மதிப்பிட்டது. இந்த மதிப்புக்குறைப்பே ஒரு மோசடி என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இது எல்ஐசியின் சொத்து மதிப் பைக் குறைத்து, அவற்றை கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கும் சதித் திட்டத்தின் ஒருபகுதி என எல்ஐசி ஊழியர் சங்கங்கள் கூறின. அது ஒவ்வொரு நாளும் உண் மையாகி வருகிறது. எல்ஐசி பங்குகள் விலை, கடந்த 4 மாதங்களில் 32 சதவிகிதம் வரை சரிந்துள்ளது. எல்ஐசி பங்கு ஒன்று ரூ. 949-க்கு விற்கப்பட்ட நிலையில், அது மே 17 அன்று சந்தையில் பட்டிய லிடப்பட்ட முதல்நாளே சரிவைக் கண்டு, 867 ரூபாய்க்கு இறங்கியது. இது கடந்த நான்கு மாதங்களின் முடி வில், செப்டம்பர் 26 - திங்களன்று 648 ரூபாய் என்ற மோசமான இறக் கத்தைக் கண்டுள்ளது. இது ஐபிஓ-விலிருந்து 32 சதவிகித சரிவாகும். எல்ஐசி முதலீட்டாளர்கள் நான்கு மாதங் களில் ரூ.1 லட்சத்து 90 கோடியை இழந்துள்ளனர். இதன்மூலம், எல்ஐசி-யின் சந்தை மதிப்பும் 6 லட்சம் கோடியிலிருந்து 4.1 லட்சம் கோடியாகக் குறைந்து, நாட்டின் மதிப்பு மிக்க நிறுவனங்கள் பட்டிய லில் மிகப் பெரிய பள்ளத்தில் விழுந் துள்ளது. பங்குச் சந்தையில் நுழைந்த போது, நாட்டின் மதிப்பு மிக்க நிறு வனங்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), எச்டிஎப்சி வங்கி மற்றும் இன்போசிஸ் ஆகியவற்றுக்கு அடுத்த 5-ஆவது பெரிய நிறுவனமான எல்ஐசி இருந்தது. அது தற்போது ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, அதானி டிரான்ஸ்மிஷன், ஐடிசி, பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎப்சி மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் போன்ற நிறுவனங்க ளுக்கும் கீழே 14-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.