ஆர்எஸ்எஸ் கொள்கையை ஒரு போதும் ஏற்க மாட்டேன்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ் எஸ் நூற்றாண்டு விழா நடை பெறுகிறது. இந்த நூற்றாண்டு விழா விற்கு பங்கேற்க காங்கிரஸ் எம்எல்ஏ நிதின் ராவுத்துக்கு ஆர்எஸ்எஸ் அழை ப்பு விடுத்தது. இந்த அழைப்பு காரண மாக நிதின் ராவுத் பாஜகவில் இணைகிறார், மகாராஷ்டி ராவில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடை கிறது என பாஜக ஐடி விங் மற்றும் கோடி மீடியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு புகைச்சலை ஏற்படுத்தின. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் கொள் கையை ஒரு போதும் ஏற்க மாட்டேன் என செய்தியாளர் சந்திப்பில் காங்கி ரஸ் எம்எல்ஏ நிதின் ராவுத் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,“ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா அழைப்பை நான் புறக்கணிக்கிறேன். நான் அம்பேத்கரின் கொள்கையை மட்டுமே மதிக்கிறேன். அதனால் ஆர்எஸ் கஸ் விழாவில் நான் கலந்து கொண்டால் அவருக்கு அவமதிப்பாக இருக்கும். ஆர்எஸ்எஸ் கொள்கையை ஒரு போதும் ஏற்க மாட்டேன்” என அவர் கூறினார்.
