states

img

ரூபாய் நோட்டில் மகாத்மா காந்திக்குப் பதில் நேதாஜி படம் போடச்சொல்லும் இந்து மகாசபை

புதுதில்லி, அக். 22 - ரூபாய் நோட்டுகளில் இருக்கும் மகாத்மா காந்தியின் படத்திற்குப் பதிலாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபை கோரிக்கை வைத்து உள்ளது. அந்த அமைப்பின் மேற்குவங்க மாநில செயல் தலைவர் சந்திரசூர் கோஸ்வாமி, அண்மையில் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். அதில், “நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் பங்களிப்பு மகாத்மா காந்தியின் பங்களிப்பை விடக் குறைவானது இல்லை. எனவே, இந்தியாவின் தலைசிறந்த சுதந்தி ரப் போராட்ட வீரரான நேதாஜியை கவுரவிக்கும் வகையில் அவரது படத்தை கரன்சி நோட்டுகளில் இடம் பெறச் செய்ய வேண்டும். காந்தியின் படத்திற்குப் பதிலாக நேதாஜி படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அண்மையில், இதே இந்து  மகாசபை அமைப்பு மேற்குவங் கத்தில் துர்கா பூஜை நடத்தியபோது, மகாத்மா காந்தியை அரக்கனாக சித்தரித்து சிலை வைத்திருந்தது. அரக்கன் சிலைக்கு வெள்ளை நிற வேட்டி மற்றும் கண்ணாடி அணி வித்துக் காட்சிப்படுத்தி இருந்தது. இது கண்டனங்களுக்கு உள்ளா னது. இந்நிலையில், காந்தி மட்டுமே  இருக்கும் ரூபாய் நோட்டில் நேதாஜியின் படத்தை பொறிக்க வேண்டும் என்று கலகத்தை ஆரம்பித்துள்ளது.  இந்நிலையில், இந்து மகா பையின் நோக்கம் நேதாஜியின் படத்தை இடம்பெறச் செய்வது அல்ல; காந்தியின் படத்தை அகற்று வது என்று விமர்சனங்கள் எழுந்துள் ளன. “காந்தியைக் கொன்றவர் கள் யார் என்று அனைவருக் கும் தெரியும்; இப்போது அவர்கள் தினசரி காந்தியின் கொள்கைக ளையும் கொல்கின்றனர். இதற்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பதில் சொல்லியே தீர வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சாடியுள்ளார்.

;