states

img

ஆர்எஸ்எஸ் சதியின் அமலாக்கமே இந்தித் திணிப்பு!

புதுதில்லி, அக்.11- ‘ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை குறிவைத்து இந்தி யை திணிக்கிறது மோடி அரசு. ஒன்றிய அரசுப் பணிக ளுக்கு இந்தியைக் கட்டாய மாக்குவது மற்றும் ஆட் சேர்ப்புத் தேர்வுகள் மற்றும்  படிப்பை இந்தியில் நடத்து வதுதான் இந்த நடவடிக்கை. இது உட்பட 112 பரிந்துரை களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலை மையிலான நாடாளுமன்றத் தின் அலுவல் மொழிக் குழு குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது. 2014 முதல், பாஜக அரசு மற்ற அனைத்து பிராந்திய மொழி களையும் புறக்கணித்து, இந்தியை மட்டுமே ஊக்கு வித்து வருகிறது.

உள்ளூர் மொழிக்கு பணம் இல்லை

இந்த ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை, உள்ளூர் மொழிக ளின் வளர்ச்சிக்கோ, மேம் பாடுகளுக்கோ போதுமான தாக இல்லை. 2019-2020இல் ரூ.561.47 கோடி அனுமதிக் கப்பட்டு, 2022-23இல் ரூ.250 கோடியாக குறைக்கப் பட்டது. 2020 ஆம் ஆண்டு நில வரப்படி, செம்மொழி தகுதி பெற்ற தமிழ், தெலுங்கு, கன் னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு மொத்தம் ரூ.29 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது. இதில், மலை யாளம் மற்றும் ஒடியா மொழிகளுக்கு இதுவரை தனி நிதியோ அல்லது செம் மொழி மையமோ இல்லை. இதற்கிடையில், மூன்று ஆண்டுகளில் 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி சமஸ் கிருதத்திற்கு மட்டும் ரூ.643.84 கோடி செலவிடப் பட்டுள்ளது. மனிதவள மேம் பாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தான் மூலம் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல் செயல்படுத்தப்படு கிறது. 2019 முதல் ஒவ்வொரு ஆண்டும் ரூ.74.45 கோடி ஒதுக்கப்படுகிறது என ஒன்றிய அரசு நாடாளுமன் றத்தில் தெரிவித்துள்ளது.

கல்வியும்  கவலை அளிக்கிறது

உயர்கல்வி நிறுவனங்க ளில் ஆங்கிலத்திற்குப் பதி லாக இந்தியை பயிற்று விப்பதற்கான ஊடகமாக மாற்றுவது கடுமையான கவலைகளை எழுப்புகிறது. மாணவர்களின் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மூடப் படும். இந்தி அல்லாத பகுதி களைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க சிரமப்படுவார்கள். இதற்கிடையில், உ.பியில் இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 7.9 லட்சம் மாண வர்கள் இந்தி தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். ஆசிரியர்களை மேற்கோள் காட்டி,அடிப்படைக் கேள்வி களுக்குக்கூட மாணவர்கள் தவறான விடைகளைப் பெற்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன என்பது கவனிக்கத்தக்கது.

;