states

img

தில்லியுடன் இதயப்பூர்வ தொடர்பு துயரக் கடலில் ஏகேஜி பவன்

புதுதில்லி, அக்.3- தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் தில்லி சென்றதும் கேரளா  ஹவுஸ் அறை எண் 201இல் தங்குவார். தோழர் வந்திருப்பது தெரிந்  தால், கேரளத்தவர்களும், கலாச்சாரப் பணியாளர்களும், தில்லி பத்திரிகையாளர்களும் அந்த அறையை அடைவார்கள். கேரளா ஹவுஸுக்கு பல்வேறு தேவைகளுக்காக வரு பவர்களும் அவரைப் பார்க்க வருவார்கள். அனைவரின் பிரச்சனை களும் கேட்கப்படும். தலையிடக்கூடிய ஒன்று என்றால் அதில் தலை யிடுவார். இல்லையெனில், தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்  படும். தில்லி வரும்போது, கோடியேரி வழக்கமாக கன்னாட் பிளேஸில் உள்ள காதி கடைக்கு அடிக்கடி வருவார். பல வருடங்களாக அவ ருக்கு இருந்த உறவின் காரணமாக கடையில் உள்ள ஊழியர்களுக்  கும் நன்கு அறிமுகமானார். தில்லியில் பத்திரிகையாளர்கள் கேரளா ஹவுஸ் கேன்டீனில் உணவு கிடைக்காமல் சிரமப்பட்டபோது, அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டியை தொடர்பு கொண்டு பிரச்சனையை தீர்த்தவர் கோடியேரி. கபுர்தலாவில் உள்ள கேரளா  ஹவுஸ் ஊழியர்களின் குடியிருப்புகளுக்குச் சென்று வாழ்க்கை நிலைமைகள் குறித்து கேட்டறிவார். ‘எனக்காக யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்பார்’  என கேரளா ஹவுஸின் முன் அலுவலக மேலாளர் கே.எம்.பிர காஷன், கோடியேரியின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தார். நோயி னால் கஷ்டப்படும் போதும் சிறப்பு வசதிகள் செய்வதை எதிர்த்தார்.  மார்ச் மாதம் நடைபெற்ற அரசியல் தலைமைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோடியேரி கடைசியாக தில்லி வந்திருந்தார்.

துயரக்கடலில் ஏகேஜி பவன்

கோடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கு தில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான ஏகேஜி பவன்  இரங்கல் தெரிவித்தது. மத்தியக்குழு உறுப்பினராகவும், அரசியல்  தலைமைக்குழு உறுப்பினராகவும் பலமுறை கோடியேரி சென்ற  கட்சியின் தலைமை அலுவலகம், அவரது திடீர் மறைவு செய்தி யால் சோகத்தில் மூழ்கியது. அவரது மறைவுச் செய்தியை அறிந்த தும் கட்சி கொடி இறக்கி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி கோடியேரியின் படத்துக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். தொண்டர்களும், ஊழியர்களும் ‘துணிச்ச லான தோழர் சாகவில்லை’ என முழக்கங்களை எழுப்பினர்.
 

;