states

img

17 மாதங்களாக இரட்டை இலக்கத்தில் பயணிக்கும் மொத்த விலைப் பணவீக்கம்!

புதுதில்லி, செப். 15- ஆகஸ்ட் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்கம் (Wholesale Price Inflation - WPI) தொடர்பான விவரங் களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இதில், ஜூலை மாதத்தில் 13.93 சதவிகிதமாக இருந்த மொத்த விலைப் பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் 12.41 சதவிகிதமாக குறைந்துள்ளது என்று  தெரிவித்துள்ளது. எனினும், மொத்த விலைப் பண வீக்கம் தொடர்ந்து 17-ஆவது மாதமாக இரட்டை இலக்கத்தில் பதிவாகி யுள்ளது. இதேபோல இரண்டு நாட்களுக்கு நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index -CPI) அடிப் படையிலான சில்லரை விலைப் பண வீக்கம், ஜூலை மாதத்தைக் காட்டிலும் 0.29 புள்ளிகள் அதிகரித்திருந்தது. ஜூலை மாதத்தில் 6.71 சதவிகித மாக இருந்த சில்லரை விலைப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7.00 சதவிகிதமாக உயர்ந்தது. 2022-23 நிதியாண்டிற்கான பணவீக்க உச்ச  வரம்பு 6 சதவிகிதம் என்று ரிசர்வ் வங்கி (RBI) நிர்ணயித்துள்ள நிலையில், தொடர்ந்து 8-ஆவது மாதமாக, சில்லரை விலைப் பணவீக்கம் 6 சதவிகிதத்தைத் தாண்டி பதிவானது.

குறிப்பாக, இந்த சில்லரை விலை பணவீக்கமானது, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிகமாக இருப்பது தேசிய புள்ளியியல் அலுவல கம் (NSO), புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்ட தரவுகளில் தெரியவந்தது. ஆகஸ்ட் மாதத்தில், நகர்ப்புற பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.49 சதவிகிதத்தில் இருந்து ஆகஸ்ட் 6.72 சதவிகிதமாக உயர்ந்துள்ள நிலையில், கிராமப்புற பணவீக்கம் 6.8  சதவிகிதத்தில் இருந்து 7.15 சதவீதமாக உயர்ந்துள்ளது.

1,114 நகர்ப்புறப் சந்தைகள் (98.4 சதவிகித நகர்ப்புறங்கள்) மற்றும் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 1,181 கிராமச் சந்தைகளில் (99.9 சதவிகித கிராமங்கள்) இருந்து பெறப்பட்ட தரவு கள் அடிப்படையில் இந்த புள்ளிவிவ ரங்கள் வெளியிடப்பட்டு இருந்தன. மேலும், காய்கறிகள், மசாலாப் பொருட்கள், காலணிகள் மற்றும் எரிபொருட்கள் ஆகியவற்றின் விலை வாசி உயர்வு ஆகஸ்ட் மாதத்தில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்ததே சில்லரை விலைப் பணவீக்க அதிகரிப்புக்கு காரணம் என்றும் கூறப்பட்டது. இந்த பின்னணியில் மொத்த விலைப் பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் குறைந்திருந்தாலும், தொடர்ந்து 17-ஆவது மாதமாக இரட்டை இலக்கத்தை விட்டு இறங்கவில்லை. தாது எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உலோகங்கள், ரசாயனம், ரசாயனப் பொருட்கள், மின்சாரம் ஆகியவற்றின் விலை உயர்வே ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலைப் பணவீக்கம் பெரிய அள விற்கு குறையாததற்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 15.88 சதவிகிதம் உச்சத்தை தொட்ட நிலையில், அத னோடு ஒப்பிடுகையில், தற்போது  12.41 சதவிகிதம் என்று குறைந்துள் ளது. ஆனால், இதே மொத்த விலைப் பணவீக்கம், 2021 ஆகஸ்ட் மாதத்தில் 11.64 சதவிகிதம் என்ற அளவிலேயே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

;