states

img

கால்நடைகளுக்கு உணவாகும் முருங்கைக்காய்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்தி ரம் இடையக்கோட்டை, மார்க் கம்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும்  அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்க ளில் முருங்கைக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து  உற்பத்தியாகும் முருங்கைக்காய்கள் லாரிகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு  மாவட்டங்களுக்கும் மற்றும் வெளிமாநி லங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின் றன. இந்நிலையில் தற்போது மார்க்கெட் டுக்கு முருங்கைக்காய் வரத்து அதிகமாக உள்ளதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருங்கைக்காய் வரத்து குறை வாக இருந்தது. இதனால் ஒரு கிலோ  முருங்கைக்காய் ரூ.100 வரை விற்பனை  ஆனது. ஆனால், தற்போது வரத்து அதிக ரித்துள்ளதால் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி ஒரு  கிலோ முருங்கைக்காய் ரூ.6 முதல் 9  வரை விற்பனையாகிறது. இதனால் விவ சாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பறிப்பு கூலி மற்றும் மார்க்கெட்டு கொண்டு செல்ல போக்குவரத்து செலவு கூட வரு வாய் கட்டுப்படி ஆகவில்லை.  இதனால் ஏராளமான விவசாயிகள் மரங்களில் முருங்கை காய்களை பறிக்கா மல் விட்டு விட்டுள்ளனர். மேலும் பறிக்கப்  பட்ட முருங்கை காய்களை ஆடு, மாடு களுக்கு உணவாக வழங்கி வருகின்றனர்.