மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டில் போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு, தயாரிப்பு மிக மோசமான அளவில் அதிகரித்து வரு கிறது. குறிப்பாக பாஜகஆளும் மாநிலங்கள் போதைப்பொருள் கூடாரமாக இருக்கின்றன. இந்நிலையில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தின் முசாபர்பூருக்கு அருகே போதைப்பொ ருள் கடத்தல் கும்பல் பதுங்கி இருப்ப தாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு (டிஆர்ஐ) ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து டிஆர்ஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை மற்றும் சோத னையில் ரூ.42 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போதைப் பொருள் கும்பலில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில் 700 கிலோ 700 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஈரானியப் படகு குஜராத்தின் போர்பந்த ரில் இரவோடு இரவாக நடுக்கடலில் பிடிபட்டுள்ளது. அதிலிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.