கடந்த ஜூன் மாதம் ஒடிசா மாநிலத்தின் பாலசூர் அருகே சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா நோக்கி சென்ற ஷாலி மர் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஒன்று அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 295 பேர் உயிரிழந்த நிலையில், 126 பேர் பலத்த காயம் அடைந்த தோடு, 451 பேர் லேசான காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோத னைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் 28 பேரின் உடல்களுக்கு உற வினர்கள் யாரும் உரிமை கோரா மல் இருந்தனர். இதனால் 28 உடல்களும் 3 மாதங்களுக்கு மேல் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பிண வறையில் பாதுகாக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில், 28 உடல் களையும் சட்டத்திற்கு உட்பட்டு அடக்கம் செய்ய ஒடிஷா மாநி லத்தின் புவனேஸ்வர் மாநக ராட்சி முடிவு செய்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை இயக் குநர் உடல்களை மாநகராட்சி யின் உதவி சுகாதார அலுவலரி டம் ஒப்படைப்பார். அதன்பின் னர் உடல்கள் அனைத்தும் எரி யூட்டப்படும். இருப்பினும் உயி ரிழந்தவர்களின் தகவல்கள் புவனேஸ்வர் மாநகராட்சியிடம் இருக்கும் என்பதால் பிற்காலத் தில் உயிரிழந்தவர்களின் உற வினர்கள் யாரேனும் தகவல் னள் கேட்டு வந்தால் அவர் களுக்கு உரிய ஆவணங்கள் வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.