states

img

பெட்ரோல் - டீசல் விலையை குறைக்காமல் மோடி அரசின் தொடரும் கொள்ளை..!

புதுதில்லி, செப். 14 - சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் சரிவு  ஏற்பட்டுள்ள நிலையிலும், உள்நாட் டில் பெட்ரோல், டீசல் விலையை மோடி அரசு குறைக்காதது நாடு  முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு சுமார் 92 டாலர்கள் அளவிற்கு குறைந்துள்ளது.

கடந்த பிப்ரவரியில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 90 டாலர்கள் என்ற அள வில் இருந்தது. இதுவே ஜூன் மாதத்தில் பீப்பாய் 125 டாலர்கள் என்று உயர்ந்தது. தற்போது அது மீண்டும் 90 டாலர்கள் அளவிற்கு குறைந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை  92.84 டால ராக உள்ளது. இது கடந்த ஏழு மாதங் களில் இல்லாத விலைகுறைவாகும். எனினும் இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து குறையாமலேயே உள்ளது. விலைகள் உயர்த்தப்படும் போதெல்லாம், சர்வதேச விலை நிலவரங்களின் அடிப்படையிலேயே பெட்ரோல் - டீசல் விலை நிர்ண யிக்கப்படுவதாக ஒன்றிய அரசு கூறு வது வழக்கம். ஆனால், சர்வதேசச் சந்தையில் தற்போது ஒரு வாரத்திற் கும் மேலாக கச்சா எண்ணெய் விலை 90 டாலருக்கும் கீழாக குறைந்தும் கூட, பெட்ரோல் - டீசல் விலையைக் குறைக்காமல் உள்ளது.

தற்போது, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டர் 96 ரூபாய் 72 காசுகள், டீசல் விலை லிட்டர் 89 ரூபாய் 62 காசுகள், மும்பையில் பெட்ரோல் விலை லிட்டர் 111 ரூபாய் 35 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 97 ரூபாய் 28 காசுகள், சென்னை பெட்ரோல் விலை லிட்டர் 102 ரூபாய் 63 காசுகள், டீசல் விலை லிட்டர் 94 ரூபாய் 24 காசுகள், கொல்கத்தாவில் பெட்ரோல் லிட்டர் 106 ரூபாய் 03 காசுகள், டீசல் லிட்டர் 92 ரூபாய் 76 காசுகள், பெங்களூருவில் பெட்ரோல் லிட்டர் 101 ரூபாய் 94  காசுகள், டீசல் 87 ரூபாய் 89 காசு கள், ஹைதராபாத்தில் பெட்ரோல் 109 ரூபாய் 66 காசுகள், டீசல் 97 ரூபாய் 82 காசுகள் என்ற விலையில் விற்கப்பட்டு வருகின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட் ரோல் - டீசல் விலை குறையுமா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு,  ஒன்றிய அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதிலளித்துள்ளார். அதில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து ள்ள போதிலும், “இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ள தால், அவை மீண்டுவர இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது” என்று பதிலளித்துள்ளார்.

அதாவது பெட்ரோல் - டீசல் விலைகளை நாங்கள் குறைக்கப் போவதில்லை- ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமி டெட் (HPCL), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (BPCL) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்ப ரேசன் லிமிடெட் (IOCL) போன்ற எண்ணெய்யை சந்தைப்படுத்தும் நிறுவனங்களும், இப்போதைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மாட்டாது என்பதையே மறைமுகமாக அவர் குறிப்பிட்டுள் ளார். அமைச்சரின் இந்த பதில் நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம்... அது எப்படி ஏற்பட்டது? யார் காரணம்..? என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. 2014-15 நிதியாண்டில் ரூ. 1 லட்சத்து 72 ஆயிரத்து 065 கோடி யாக இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ஒன்றிய அரசின் வரி வருவாய் 2021-22ல் ரூ. 4 லட்சத்து 92 ஆயிரத்து 303 கோடியாக அதி கரித்துள்ளது. இதில் நஷ்டம் எங்கே  வந்தது? என்ற விவாதம் முன்னுக்கு வந்துள்ளது.

கடந்த 2015 - 2017க்கு இடையே,  சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 46 முதல் 47  டாலர் என்ற அளவில்தான் இருந்தது.  இந்த காலகட்டத்தில் பெட்ரோல் மீதான கலால் வரியை 22.9 சத விகிதமும், டீசல் மீதான கலால் வரியை 68.47 சதவிகிதமும் ஒன்றிய அரசு உயர்த்தியது. இந்த வரிகளை உயர்த்தாமல் இருந்திருந்தால், ஒரு  லிட்டர் பெட்ரோல், 50 முதல் 55 ரூபா ய்க்கு மக்களுக்கு கிடைத்திருக்கும். அதன் பிறகும், 2019-20-இல் பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 60.47 டாலரிலிருந்து 2020-21இல் 44.82  டாலராக குறைந்தது. கொரோனா கால நுகர்வு குறைவு இதற்கு காரண மாக அமைந்தது. ஆனால் அப்போ தும் ஒன்றிய அரசு தொடர்ந்து கலால் வரியை மேலும் மேலும் உய ர்த்தியது. மக்கள் பயனடையாமல் பார்த்துக் கொண்டது. கொரோனா காலத்தில் 2020 மார்ச்சில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 19 ரூபாய் 98  காசுகளாக இருந்தது. இது 2022 பிப்ரவரியில் 32 ரூபாய் 90 காசுகளாக உயர்த்தப்பட்டது. அதாவது கொரோனா காலத்திலும் பெட்ரோல்  மீது லிட்டருக்கு 13 ரூபாய் வரி  உயர்த்தப்பட்டது. டீசல் மீதும் லிட்ட ருக்கு 16 ரூபாய் வரி உயர்த்தப்பட் டது. 31 ரூபாய் 80 காசுகள் கலால் வரி விதிக்கப்பட்டது.

இதன்காரணமாக, 2014-15 மற்றும் 2021-22ஆம் ஆண்டுக்கு இடை யில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி மூலம் ஒன்றிய அரசுக்கு கிடைத்து வந்த வரி வருவாய் தற்போது 186 சதவிகிதம் வரை அதி கரித்துள்ளது. தனித்தனியாக பார்த்தால், பெட்ரோல் மீதான கலால்  வரியை 194 சதவிகிதமும், டீசல் மீதான கலால் வரியை 512 சதவிகிதமும் ஒன்றிய அரசு அதிகரித்துள்ளது. 2014-15.இல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி வருவாய் ரூ. 1 லட்சத்து 72 ஆயிரத்து 065 கோடி யாக இருந்தது. அது 2021-22 நிதி யாண்டில் ரூ. 4 லட்சத்து 92 ஆயி ரத்து 303 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த மே 21-ஆம் தேதி பெட் ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு பெட்ரோலுக்கு லிட்ட ருக்கு 9 ரூபாய் 50 காசுகள் என்ற அள விலும், டீசலுக்கு 7 ரூபாய் என்ற அள விலும் ஒப்புக்கு குறைத்தது. அது பெரிய நிவாரணமாக இல்லை. இவ்வாறு கலால் வரி என்ற  பெயரில் மக்களிடம் கொள்ளை யடித்த பிறகும் கூட எண்ணெய் நிறு வனங்கள் நஷ்டத்தில் இருக்கின் றன என்றால், அதற்கு யார் பொறுப் பாக முடியும். மீண்டும் மீண்டும் மக்கள் மீதே சுமையை ஏற்றுவதற் கே இதையே ஒரு தந்திரமாகவும் மோடி அரசு கடைப்பிடித்து வருகின் றது. இது அப்பட்டமான பகல் கொள் ளை. மாபெரும் மோசடி என்று பல ரும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

;