states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஐ (எம்எல்) பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா

தடியடி, வேலைவாய்ப்பு தொடர்பாக பீகார் மக்கள் கடும் கவலையில் உள்ளனர். முன்னெப் போதும்  இல்லாத வகையில் மாற்றத்தை காண பீகார் முழுமையாக தயாராக உள்ளது. குறிப்பாக “இந்தியா” கூட்டணியின் 7 கட்சிகள் மாற்றத்தைக் கொண்டு வரும் என பீகார் மக்களும் உறுதியாக உள்ளனர்.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ் குமாருக்கு அநீதி இழைக்கப்படுகிறது. ஒருபோதும் பாஜக அவரை  முதலமைச்சராக்கப் போவதில்லை. ஒவ்வொரு முறையும் நிதிஷ் குமாரை முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறை மட்டும் அமித் ஷா ஏன் நிதிஷ் குமார் பெயரை உச்சரிக்கவில்லை?

விகாசில் இன்ஸான் தலைவர் முகேஷ் சஹானி

பீகார் சட்டமன்ற தேர்தலில் “இந்தியா” கூட்டணி அபார வெற்றி பெறும். ஜனநாயகத்தில் மக்களே முக்கியம். இதற்கு மாற்று கருத்து இல்லை. அதனால் 150 இடங்களுக்கு மேல் வென்று பீகாரில் மக்கள் நலனுக்கான அரசை அமைப்போம்.

மூத்த பத்திரிகையாளர் ராணா அய்யூப்

முஸ்லிம் மக்களின் ஹலால் உணவை பயங்கரவா தத்துடன் இணைத்து பேசியுள்ளார் உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத். அவரது வழக்கமான பேச்சில் எவ்வித ஆச்சரியமும் ஒன்றுமில்லை. நாட்டில் வாழும் 22 கோடி முஸ்லிம் மக்களை குறித்து அவதூறு பேசுவதும், துன்புறுத்துவதும் பாஜக ஆட்சியில் புதிய இயல்பாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் கண்டிக்க ஆள் இல்லை.