புதுதில்லி, மார்ச் 15- “கல்வி நிலையங்களில் ஹிஜாப்பிற்கு தடை விதித்தது செல்லும்” என்று கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ’கேலிக்குரி யது’ என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். கர்நாடக கல்வி நிலையங்களில், முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, உடுப்பி முஸ்லிம் மாணவியர், கர்நாடக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ் வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் ஜே.எம். காஜி, கிருஷ்ணா தீட்சித் அடங்கிய அமர்வு 11 நாட்கள் விசாரித்தது. அதன்முடிவில், செவ்வாயன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், “ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையின்படி அத்தியா வசிய பழக்கம் இல்லை. ஆகையால் கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவித் துண்டு என மத அடையாளங்களைத் தாங்கி வரத் தடை விதித்து பிப்ரவரி 5, 2022-ல் விதிக்கப்பட்ட உத்தரவு செல்லும். பள்ளிச் சீருடை என்பது சட்டப்பூர்வமானதே” என்று உத்தரவு பிறப் பித்தனர். இது தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. “கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஹிஜாப் என்பது நீங்கள் நினைத்துக் கொண்டிப்பதுபோல் வெறும் ஆடை பற்றியது அல்ல. ஒரு பெண் எப்படி ஆடை அணிய விரும்புகிறாள் என்ப தைத் தேர்ந்தெடுக்கும் அப்பெண்ணின் உரி மையைப் பற்றியது. இந்த அடிப்படை உரிமை யை நீதிமன்றம் நிலைநாட்டவில்லை என்பது கேலிக்குரியது” என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா விமர் சித்துள்ளார். “ஹிஜாப் மீதான தடை மிகவும் ஏமாற்ற மளிக்கிறது. ஒருபுறம் பெண்களின் உரிமை கள் மற்றும் அவர்களின் அதிகாரமளித்தல் குறித்து பெரிய கோரிக்கைகளை முன்வைக் கிறோம். மற்றொரு புறம் அவர்கள் விரும்பும் ஆடைகளை அணியும் உரிமையைக் கூட நாம் வழங்குவதில்லை. இந்த உரிமை நீதி மன்றங்களுக்கு இருக்கக் கூடாது” என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.