states

img

குழந்தை தொழிலாளர் மீட்பு மையங்கள் மூடப்படும் அவலம்

புதுதில்லி, அக்.2- நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கல்வி கற்ப தற்கான வாய்ப்புகள் பெருகி விட்ட நிலை யிலும், எத்தனையோ குடும்பங்களில் படிப்ப றிவு இல்லாமலும், படிப்பதற்கு வசதி இல்லா மலும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் அவல நிலை தொடர்ந்து கொண்டு  இருக்கி றது. இதிலிருந்து அவர்களை மீட்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் (ராஷ்டிரீய பால்  ஸ்ரம் பரியோஜனா). குழந்தை தொழிலா ளர்களை மீட்டு அவர்களுக்கு கல்வி கிடைக்க வகை செய்வது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.  ஆனால், நேஷனல் சர்வே ஆப் இந்தியா வின் சமீபத்திய ஆய்வறிக்கையில், இந்த ஆண்டு இந்தியாவில் படிப்பறிவு 77.7 சதவீத மாக உள்ளது.  பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கடந்த மார்ச் மாதத்துடன் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தை நிறுத்திவிட்டது. சமக்ர சிக்‌ஷா அபியான் எனப்படும் முழுமையான கல்வித் திட்டத்துடன் இணைக்கப்பட்டு விட்ட தாக ஒன்றிய அரசு அறிவித்து விட்டது.

மீட்கும் கதவுகள் அடைப்பு

ஒன்றிய அரசு கடந்த 2018 மே மாதம் சமக்ர சிக் ஷா அபியான் எனப்படும்  முழுமையான கல்வி திட்டத்தை தொடங்கியது. சர்வ சிக் ஷா  அபியான், ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷா எனப்படும் இடைநிலைக்கல்வியின் தரத்தை உயர்த்த கொண்டுவரப்பட்ட திட்டத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில், இந்த திட்டம்  செயல் படுத்தப்பட்டது. இவ்வாறு இணைக்கப்  பட்ட பிறகு, குழந்தைத் தொழிலாளர்களை மீட்கும் கதவுகள் ஏறக்குறைய அடைக்கப்பட்டு விட்டதாக சமூக ஆர்வலர்கள் சிலர் தெரி விக்கின்றனர்.  பழங்குடியினரின் குழந்தைகள் இந்த திட்டத்தின் கீழ் அதிகமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த மையங்கள் மூடப்பட்டு விட்டதால், குழந்தை தொழிலாளர்களை கண்காணிக்க வழி யின்றி போய்விட்டது. இனி இவர்களை மீட்டு  கல்வி கிடைக்கச் செய்வது யார் எனவும் கேள்வி  எழுந்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் 59 மாவட்டங்க ளில் கடந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிப்படி, 1225 சிறப்பு பயிற்சி மையங்கள் உள்ளதாகவும், இவற்றில் 33,573 குழந்தை தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய தொழிலா ளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்த மையங்களின் தலைவ ராக, மாவட்ட நீதிபதி பொறுப்பு வகிப்பார். பிற  மாநிலங்களை விட அதிகபட்சமாக தமிழ கத்தில் மட்டும் 15 மாவட்டங்களில் மொத்தம் 233  மையங்கள் உள்ளன.

சமூக ஆர்வலர்கள் மற்றும் திட்டப்பணியில் ஈடுபட்டவர்கள் சிலர் அளித்த தகவலின்படி, இந்த மையங்கள் மூடப்பட்டு விட்டதாக கூறப்  படுகிறது. இதனால், கண்காணிக்கவும் வழி யின்றி, கைதூக்கி விடவும் ஆளின்றி குடும்ப  பாரத்தை சுமக்கும் அழுத்தத்துக்கு ஆளா கும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி யாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

நின்றுபோன உதவித்தொகை

தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டு பயிற்சி மையத்தில் சேர்க்கப் பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.150 வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. பின்னர், 2017 பிப்ரவரி மாதம் இந்த தொகை மாதம் ரூ.400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அதன் பிறகே இந்த நிதியுதவி பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.  இதுதொடர்பாக திருப்பூர் எம்பி சுப்ப ராயன் ஓராண்டு முன்பு திட்ட இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள் ளார். இதுமட்டுமின்றி, திட்டத்தில் பணியாற்றிய சிலருக்கு சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.

சுமார் 16 கோடி குழந்தை தொழிலாளர்கள்

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பறிபோன, ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்  தின் குழந்தைகள் வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. யூனிசெப் நிறுவனம்  கடந்த ஆண்டு சமர்ப்பித் ஆய்வறிக்கை யின்படி, உலக அளவில் குழந்தை தொழிலா ளர்கள் எண்ணிக்கை 16 கோடியாக உயர்ந் துள்ளது என தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை  கணக்கெடுப்பின்படி 5 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 25.96  கோடி பேர். இவர்களில் ஒரு கோடிக்கும்  மேற்பட்டோர் வேலையில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர். அதாவது, 2001-2011 ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் 26 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளனர். நாட்டில் உள்ள மொத்த குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ளவர்கள் மட்டும் சுமார் 55 சதவீதம் பேர் என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

 

;