states

img

முதல்வர் நைபியூ ரியோ கடும் எதிர்ப்பு சிறப்பு அதிகாரச் சட்டம் நாகாலாந்துக்கு தேவையில்லை!

கோஹிமா, டிச.7- ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ஒன் றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாகாலாந்து முதல்வர் நைபியூ ரியோ வலி யுறுத்தி உள்ளார்.  நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் 14 அப்பாவி பொதுமக் களை ராணுவத்தினர் சுட்டுப் படு கொலை செய்தனர். தற்போது இந்த படுகொலைக்கு ராணுவம் வருத்தம் தெரிவித்திருந்தாலும், நடந்த சம்ப வம், நாட்டில் பெரும் அதிர்ச்சியை யும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி யுள்ளது. இந்நிலையில் திங்களன்று மோன் மாவட்டத்துக்கு நேரில் சென்ற முதல் வர் நைபியூ ரியோ, ராணுவத்தின ரால் படுகொலை செய்யப்பட்ட 14 அப்பாவி நிலக்கரிச் சுரங்க தொழி லாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கினார். மேலும் 14 பேரின் இறுதி நிகழ்ச்சிகளி லும் நைபியூ ரியோ கலந்து கொண் டார்.  அப்போது, நாகாலாந்து மாநி லத்தில், ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் ஒன்றிய அரசின் சட்டத்தை (Armed Forces Special Powers Act -AFSPA) உடனடி யாகத் திரும்பப் பெற வேண்டும் என நைபியூ ரியோ வலியுறுத்தியுள்ளார். “தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ளத்தான் ஆயுதப் படை யினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். மாறாக, நாகாலாந்து மாநிலத்தில் ஏன் இச் சட்டம் அமலில் இருக்க வேண்டும்?”  எனவும் அவர் கேள்வி எழுப்பியுள் ளார்.

;