states

img

குழந்தைகள் புகார் தெரிவிக்கும் தொலைபேசி எண் மாற்றம் : 112 எண் அறிமுகம்

புதுதில்லி,செப்.14-  குழந்தைகளுக்காக பிரத்யேக மாக இயங்கும் சைல்ட்லைன் தொலைபேசி எண்ணை ஒன்றிய அரசு மாற்றியுள்ளது. இதனால் புகார்கள் தெரிவிப்பது குறையும் என்று எண்ணை மாற்றியதற்கு குழந்தைகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து ஒன்றிய மகளிர்-  குழந்தைகள் மேம்பாட்டு அமைச்ச கத்தின் துணைச் செயலர் மனோஜ்  குமார் கடந்த 12ஆம் தேதி எழுதி யுள்ள கடிதத்தில், ஒன்றிய அரசு குழந்தைகள் உதவி எண் (1098) ஐ 112 என்ற அனைத்துவிதமான அவ சர அழைப்புகளுக்கான எண்ணு டன் இணைக்க இருக்கிறது. 112  இந்தியா செயலியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு கள், சிடாக் என்ற ஒன்றிய  உயர் கணினி மேம்பாட்டு மையம் உதவி யுடன் மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மாநில அளவிலான நோடல் அதிகாரிகள், இரண்டாம் நிலை அதிகாரிகளை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். சிடாக்குக்கு தேவையான உதவி களை செய்யவும், மகளிர் மற்றும்  குழந்தைகள் மேம்பாட்டு கட்டுப்பா ட்டு அறைக்கென பிரத்யேக கட்டி டம் அல்லது இடம் ஏற்படுத்தித்தர வேண்டும்.  மிஷன் வட்ஸாலயா என்ற திட்டத்தின் படி 1098 என்ற உதவி எண் 112 என்ற எண்ணுடன் இணைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு

இந்த எண் மாற்றம் குறித்து குழ ந்தைகள் நல ஆர்வலர்கள் கூறுகை யில்,  26 ஆண்டுகளாக குழந்தைகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்த எண்ணை முடக்கி புதிய எண்ணை அறிவித்தால் அது குற்றங் கள், புகார்கள் தெரிவிக்கப்படும் அளவை பாதிக்கும் .இவ்வாறாக 112 என்ற எண்ணை குழந்தைகள் அழைத்தால் காவல்துறையினரே இந்த புகார் அழைப்பை ஏற்கும் முதல் நபராகவும் ஆகலாம் இத னாலும் குழந்தைகள் தயங்கி குற்றங்களைத் தெரிவிக்காமல் போகலாம் என்று தெரிவிக்கின்றனர். 1996ல் டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸின் திட்ட மாக அறிமுகமான சைல்டுலைன் தனியார் ட்ரஸ்ட் மூலம் ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் நல  அமைச்சக நிதியுதவிடன் இயங்கி யது. 1098 உதவி எண்ணுக்கு இப்போது ஆண்டுக்கு சராசரியாக 80 லட்சம் புகார்களைப் பெறுகிறது. 700 மாவட்டங்களில் இந்த சேவை உள்ளது.  ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் சைல்டு லைன் ஹெல்ப் டெஸ்க்கும் உள்ளது.  இந்நிலையில் இதனை அழித்து விட்டு 112 சேவையை அமல்படுத்தி னால் நிச்சயமாக புகார் எண்ணி க்கை குறையும் என்று குழந்தைகள் நல ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.  112 அழைப்புகள் காவல்துறை க்கே செல்லும். அதை ஏற்கும் காவல் துறையினர் பின்னர் அதனை 1098 க்கு  மாற்றுவர். குழந்தைகளின் புகார் அழைப்புகளை ஏற்கும் முதல் நபராக காவல் அதிகாரிகள் இருக்கக் கூடாது.  அவர்களால் குழந்தை களுக்குத் தேவையான கவுன்சிலிங்கை தர  இயலாது என்றும் தெரிவித்துள்ள னர்.

;