states

img

திரிபுராவில் பாஜக எம்எல்ஏ மருமகன் அட்டூழியம் 2 குழந்தைகளின் தாய் பலாத்கார முயற்சியுடன் எரித்துக் கொலை

திரிபுராவில் பாஜக எம்எல்ஏ மருமகன் அட்டூழியம்

2 குழந்தைகளின் தாய் பலாத்கார முயற்சியுடன் எரித்துக் கொலை

அகர்தலா வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்த போது அமைதிப் பூங்காவாக இருந்த திரிபுரா, பாஜக ஆட்சி அமைந்த பின்பு குற்றச் சம்பவங்களின் கூடாரமாக மாறி வருகிறது. இந்நிலையில், திரிபுரா தலைநகர் அகர்தலா அருகே கக்ரபான் சட்டமன்றத் தொகுதியின் மிர்சா பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜ் சர்க்கார். இவரது மனைவி அஞ்சலி சர்க்கார். வயது 35. வியாழக்கிழமை அன்று கக்ரபான் தொகுதி பாஜக எம்எல்ஏ ஜிதேந்திர மஜூம்தாரின் மரு மகன் அனுபம் மஜூம்தார் அஞ்சலி சர்க்காரை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அஞ்சலி சர்க்கார் மறுத்து மாநில அவசர உதவி எண் 112-ஐத் தொடர்பு கொண்டு, உதவி கோரி மன்றாடியுள்ளார். ஆனால் அனுபம் மஜூம்தாருடன் வந்த கின்கர் தாஸ், லிட்டன் தாஸ், தீப்தானு தாஸ், ஆகாஷ் தாஸ் உள்ளிட்ட 5 பேரும் அஞ்சலி மீது தாக்குதல் நடத்தி செல்போனை பறித்தனர்.  நடவடிக்கை எடுக்காத காவல்துறை தகவலறிந்த அஞ்சலியின் கணவர் வீட்டி ற்கு வர 2 பேர் மீதும் அக்கும்பல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தியது. இருவரும் உயிர் பிழைக்க காவல்நிலையத்திற்கு ஓடினர். ஆனால் பாஜக குண்டர்கள் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று அனுபம் மஜூம்தாரும் அவரது கும்பலும் அஞ்சலி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியது. பங்கஜ் சர்க்கார், மனைவியை தேடிய போது, வீட்டிற்கு அருகிலுள்ள சாலையோ ரத்தில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுத் தார். அஞ்சலி உயிரிழந்த பின்பே சம்பவ இடத்திற்கு வந்தது திரிபுரா காவல்துறை. இந்த பாலியல் வன்கொலையை கண்டித்து மிர்சா கிராம மக்கள் போராட்டம் நடத்தப் போவ தாக அறிவித்துள்ளனர். அருகில் உள்ள கிரா மங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரி விக்க கக்ரபானில் பதற்றமான சூழல் ஏற் பட்டுள்ளது.

சிபிஎம் அலுவலகத்தை புல்டோசர் மூலம் இடித்த பாஜக

திரிபுராவில் பாஜக அரசின் ஒரே குறிக்கோள் மாநிலத்தில் எதிர்க்கட்சி கள் இருக்கக் கூடாது என்பது தான். ஒவ்வொரு மாதமும் பாஜக - ஆர்எஸ்எஸ் குண்டர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சனியன்று அதிகாலை 3 மணியளவில் அகர்தலா நகரத்தின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சிபிஎம்-இன் பிர தாப்கர் அலுவலகத்தை பாஜக குண்டர்கள் புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளினர். இந்த சம்பவத்திற்கு சிபிஎம் திரிபுரா மாநிலக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.